• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குருமா குழம்பை இப்படி செஞ்சு பாருங்க.. தட்டில் கொஞ்சமே கொஞ்சம் சாப்பாடு கூட மிஞ்சாது..

குருமா குழம்பை இப்படி செஞ்சு பாருங்க.. தட்டில் கொஞ்சமே கொஞ்சம் சாப்பாடு கூட மிஞ்சாது..

குருமா குழம்பு

குருமா குழம்பு

  • Share this:
    குருமா குழம்பு சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். இதில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை சேர்த்து சமைப்பதால் ஆரோக்கியமான உணவு என்பதால் வாரம் ஒரு முறையேனும் குருமா குழம்பு செய்து சாப்பிடுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - 2 tbsp
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    கருவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
    உப்பு - தே.அ
    மிளகாய் தூள் - 1 tsp
    தனியா தூள் - 1 tsp
    கரம் மசாலா - 1 tsp
    மஞ்சள் தூள் - 1/4 tsp
    கேரட் - 1 கப்
    பீன்ஸ் - 1 கப்
    பட்டாணி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 1 கப்
    காலிஃப்ளவர் - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு

    மசலா பேஸ்ட் அரைக்க :

    தேங்காய் - 1/2 கப்
    முந்திரி - 9
    வறுத்த கடலை பருப்பு - 1 tbsp
    சோம்பு - 1 tsp



    செய்முறை :

    முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பேஸ்ட்டை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு பட்டை , இலவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

    பின் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழையுமாறு வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.

    பச்சை வாசனை போனதும் அனைத்து காய் வகைகளையும் சேர்க்கவும்.

    தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு தட்டுபோட்டு மூடவும்.

    ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து கலந்துவிட்டு மீண்டும் மூடிவிட்டு 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.

    இறக்கியதும் கொத்தமல்லி தழை தூவிவிடவும்.

    அவ்வளவுதான் சுவையான குருமா குழம்பு தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: