உடலுக்கு ஆற்றல் தரும் 'வெஜிடபிள் சூப்'...! ரெசிபி இதோ..

Food |

உடலுக்கு ஆற்றல் தரும் 'வெஜிடபிள் சூப்'...! ரெசிபி இதோ..
வெஜிடபிள் சூப்
  • Share this:
கேரட், பீன்ஸ் , மக்காசோளம் என கலவையான காய்கறிகளைக் கொண்டு அருமையான வெஜிடபிள் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 ஸ்பூன்


வெங்காயம் - 1/2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
கோஸ் - 1/4 கப்கேரட் - 3 tsp
பீன்ஸ் - 2 tsp
மக்காசோளம் - 2 tsp
குடை மிளகாய் - 1 tsp
பட்டாணி - 2 tsp
பிரிஞ்சு இலை - 1
தண்ணீர் - 2 கப்
இடித்த காய்ந்த மிளகாய் - சிறிதளவு
மிளகு தூள்- சிறிதளவு
உப்பு- தே.அ
சோள மாவு - 3 tsp
ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவுசெய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர், கோஸ், கேரட், பீன்ஸ், பிரிஞ்சு இலை சேர்த்து வதக்குங்கள். தற்போது தண்ணீர் ஒரு கப் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?

கொதித்ததும் மக்காசோளம், பட்டாணி, குடைமிளகாய் சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் மிளகுத் தூள், காய்ந்த மிளகாய் தூள் சேர்த்து கிளறுங்கள்.

அடுத்ததாக உப்பு மற்றும் சோள மாவை அரை கப் தண்ணீரில் கலந்து அதையும் ஊற்றி கிளறுங்கள்.

சிறு தீயில் 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள்.

இறுதியாக ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து கிளறிவிட்டு இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் சூப் தயார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading