Home /News /lifestyle /

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி சீஸ் சூப்.. எப்படி செய்யலாம்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறி சீஸ் சூப்.. எப்படி செய்யலாம்?

காட்சி படம்

காட்சி படம்

ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த காய்கறி சீஸ் சூப் ரெசிபி இதோ..

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்ததில் இருந்தே, உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களாக மக்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல்வலிமையை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் பக்கம் அனைவரது நாட்டமும் தற்போது திரும்பியுள்ளது.

நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான மற்றும் சத்தான உணவு சாப்பிடுவது மிக முக்கியம். பொதுவாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது பலருக்கு பிடிக்காது. மேலும், தினசரி அதை சாப்பிடுவதால் ஆரோக்கிய உணவுகள் சலிப்பை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகின்றனர்.

ஆனால், ஆரோக்கியமான உணவுகளை சுவையாகவும் நீங்கள் விரும்பிய வகையில் செய்து சாப்பிடலாம் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. எடுத்துக்காட்டாக காய்கறி சீஸ் சூப், இதில் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் நிறைந்திருக்கிறது. அதேபோல மக்களுக்கு பிடித்த வகையில் சூப் வடிவத்தில் செய்யப்பட்டுள்ளது. உணவியல் நிபுணர் ஸ்ரேயாசி போவல் இந்த எளிதான, ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு செய்முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சூப்பில் உள்ள தக்காளி மற்றும் பீட்ரூட் போன்ற பொருட்கள் நல்ல அளவு மெக்னீசியம், பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. சூப்பில் இருக்கும் கேரட் வைட்டமின் A யின் நல்ல ஆதாரமாக உள்ளது. இது எலும்புகளின் வலிமையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

மேலும் இந்த சூப்பில் சேர்க்கப்படும் பன்னீர் துண்டுகள் புரதத்தின் வளமான மூலமாகும். இது உறுப்பு வளர்சிதை மாற்றத்துடன் தசை நிறை மற்றும் வலிமையை அதிகரிக்கிறது. மேலும், புரதமானது எடையைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்த அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது. சரி இப்போது இந்த சீஸ் சூப்பை எப்படி செய்யலாம் என்று பாப்போம்.

Also read : நீங்கள் தயிர் விரும்பியா? அப்போ இந்த இட்லியை மிஸ் பண்ணிடாதீங்க...

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1 கப்
தக்காளி - 1 கப்
கேரட் - 1 கப்
பூண்டு - 5 முதல் 6
மிக்சட் மூலிகைகள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
சீஸ் - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - சிறிதளவு
அலங்கரிக்க பார்ஸ்லி - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* கேரட், தக்காளி, பீட்ரூட்டை வேகவைத்து கெட்டியான மற்றும் மென்மையான பேஸ்ட்டாகும் வரை கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள்.

* ஒரு கடாயை எடுத்து அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணையை ஊற்றி பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டை வதக்கவும்.

* பூண்டு சிறிது பழுப்பு நிறமாக மாறியதும், அதில் காய்கறி பேஸ்டைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

Also read : இதை படித்தால் இனி செப்பு பாத்திரத்தில் தான் தண்ணீர் குடிப்பீங்க..

* பச்சை வாசம் போகும் வரை பேஸ்டை சமைத்த பிறகு, அதன் நிலைத்தன்மையை சரிபார்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* இப்போது சீஸ், எலுமிச்சை சாறு மற்றும் மிக்சட் மூலிகைகளை கலவையில் போட்டு அனைத்து பொருட்களும் முழுமையாக கலக்கும் வரை நன்கு சமைக்கவும். உங்கள் பிடிக்கும் என்றால் இறுதியில் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடலாம்.

* அவ்வளவுதான் உங்கள் காய்கறி சீஸ் சூப் பரிமாற தயாராக உள்ளது. அதை ஒரு நல்ல கிண்ணத்தில் எடுத்துவைத்து அலங்கரிக்க பார்ஸ்லி இலைகளை தூவி விடலாம். மேலும் துருவிய சீஸ் துண்டுகளை பரப்பிவிடுங்கள்.

* நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், அதே செய்முறையில் முட்டை மற்றும் சிக்கன் துண்டுகளையும் சேர்க்கலாம்.

இப்படி செய்வதன் மூலம், காய்கறி இருப்பதும் தெரியாது, அதனை சூப் வடிவத்தில் குடிப்பது கட்டாயம் சலிப்பை ஏற்படுத்தாது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Soup, Vegetable

அடுத்த செய்தி