குழந்தைகளுக்கு இந்த மாதிரி சாப்பாத்தி செஞ்சி கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

சப்பாத்தி ரோல்

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி உருளைக்கிழங்கு சப்பாத்தி வெஜ் ரோல் செய்வது எப்படி ?

 • Share this:
  உணவு என்று சொன்னாலே நாவில் எச்சில் ஊறும்.அந்த அளவிற்கு நாம் உண்ணும் உணவில் பல வகைகள் உள்ளது.சைவ உணவான சாம்பாரில் தொடங்கி அசைவ உணவான பட்டர் சிக்கன் வரை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் உணவால் உடலுக்கு ஏற்படும் உபாதைகளும் அதிகம்.எனவே நாம் எந்த அளவு ருசியாக சாப்பிடுகிறமோ அதே அளவு ஆரோக்கியமாகவும் சாப்பிட வேண்டும்.

  கோதுமை மாவில் செய்யப்படும் சாப்பாத்தி ஆரோயக்கியத்திற்காக சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று. இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் சாப்பாத்தியை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகள் மட்டுமில்லாமல் அனைவருமே சாப்பாத்தியை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

  அந்த வகையில் குழந்தைகளை சாப்பாத்தியை சாப்பிட வைப்பது கடினம். எனவே குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி உருளைக்கிழங்கு சப்பாத்தி வெஜ் ரோல் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

  தேவையான பொருட்கள்:

  வெங்காயம் - 1
  சீரகம் - கால் டீஸ்பூன்
  கோதுமை மாவு - 2 கப்
  மஞ்சள் தூள் - கால் சிட்டிகை,
  மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
  உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு
  கேரட் - 1
  குடைமிளகாய் - 1
  ப.மிளகாய் - 2
  கொத்தமல்லி - சிறிதளவு
  உருளைக்கிழங்கு - 2

  Also read : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் 'சிக்கன் கீ ரோஸ்ட்' ரெசிபி இதோ..  செய்முறை :

  • முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊர வைக்கவும்.

  • அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் , கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

  • மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்ந்து நன்றாக வதக்கினால் மசாலா தயாராகி விடும்.

  • இப்போது தேய்த்த சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

  • இறுதியில் சப்பாத்தி மேல் இந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதனை உருட்டி பரிமாற வேண்டும்.இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: