வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதை வாரம் ஒரு முறையேனும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். அதுவும் இந்த மாதிரி செய்து சாப்பிட்டால் சுவையும், ஆரோக்கியமும் கூடுதலாக கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - 1
கடுகு - 1 tsp
கடலை பருப்பு - 2 tsp
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
உப்பு - தே.அ
துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை :
வாழைத்தண்டை நார் இல்லாமல் நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.
பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் கடலை பருப்பை போடுங்கள். சிவந்ததும் காய்ந்த மிளகாய் , வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
வதங்கியதும் வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து கலந்துவிடுங்கள்.அதோடு உப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் கழித்து துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி எடுத்து சில நிமிடங்கள் வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் வாழைத்தண்டு பொரியல் தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.