முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காலை உணவை ஹெல்தியாக்க ’ஊத்தாப்பம்’ - சுவையாக செய்ய ரெசிபி

காலை உணவை ஹெல்தியாக்க ’ஊத்தாப்பம்’ - சுவையாக செய்ய ரெசிபி

ஊத்தாப்பம்

ஊத்தாப்பம்

காலையில் ஹெல்தியான உணவோடு நாளைத் துவங்கினால் அன்றைய நாள் முழுவதுமே பாசிடிவான நாளாக அமையும்.

  • Last Updated :

காலையில் ஹெல்தியான உணவோடு நாளைத் துவங்கினால் அன்றைய நாள் முழுவதுமே பாசிடிவான நாளாக அமையும். அந்த வகையில் காலையில் ஊத்தாப்பம் செய்து சாப்பிடுங்கள். ஆரோக்கியமான துவக்கமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மாவு அரைக்க

இட்லி அரிசி - 2 கப்

உளுந்து - 1/2 கப்

வெந்தையம் - 1/2 tsp

அவல் - 1 கப்

தோசை மேல் தூவ

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 ஸ்பிரிங்

கேரட் - 2

குடை மிளகாய் - 1/2

சீவிய இஞ்சி - 1/2 ஸ்பூன்

உப்பு - தே.அ

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தையம் மூன்றையும் 2 மணி நேரம் ஊற வையுங்கள். பின் மிக்ஸியில் போட்டு மொரமொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அவலை நன்கு அலசி அதையும் மிக்ஸியில் அரைத்து மாவுடன் கலந்துகொள்ளுங்கள்.

தற்போது மேலே தூவ கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். கேரட்டை சீவிக்கொள்ளுங்கள்.

அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

தற்போது மாவில் உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் தடியான அளவில் கல்லில் மாவு ஊற்றி சுற்றுங்கள்.

பின் தூவ வைத்துள்ள கலவையை மாவின் மேல் கைகளால் தூவுங்கள். பின் லேசாக கரண்டியால் அழுத்துங்கள். சுற்றிலும் நெய் விட்டு தட்டு போட்டு மூடுங்கள். சிறு தீயில் இருக்க வேண்டும். வெந்ததும் மறுபுறமும் திருப்பி எடுத்தால் ஊத்தாப்பம் தயார்

இதற்கு காரச்சட்னி பொருத்தமாக இருக்கும்.

First published: