ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் உளுத்தம் பருப்பு கூட்டு... செஞ்சு பாருங்க..!

சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் உளுத்தம் பருப்பு கூட்டு... செஞ்சு பாருங்க..!

பருப்பு வகைகள் :  பயறு, பீன்ஸ், சுண்டல் போன்றவை நேர்மறையான கிளைசெமிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அவை இந்திய பருப்பு வடிவமாக சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் கூடுதல் சர்க்கரையுடன் கூடிய சமையல் குறிப்புகளில் இல்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

முகலாயர்களின் விருப்பமான உணவு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உடைத்த உளுத்தம் பருப்பால் செய்யப்படும் இந்த உணவு முகலாயர்களின் விருப்பமான உணவு. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

  தேவையான பொருட்கள் :

  உளுத்தம் பருப்பு - ஒரு கப்

  நெய் - 1 Tsp

  பட்டை - 1 இஞ்ச்

  கிராம்பு - 3

  காய்ந்த மிளகாய் - 3

  வெங்காயம் - 1

  பூண்டு - 3

  இஞ்சி - 1 துண்டு

  தக்காளி - 1

  பச்சை மிளகாய் - 1

  மிளகாய் தூள் - 1/4 Tsp

  தனியா தூள் - 1 Tsp

  மஞ்சள் தூள் - 1/4 Tsp

  கரம் மசாலா - 1/4 Tsp

  கொத்தமல்லி - சிறிதளவு

  கருவேப்பிலை - சிறிதளவு

  தண்ணீர் - 3 கப்

  தாளிக்க :

  நெய் - 1 Tsp

  சீரகம் - 1 Tsp

  உடைத்த மிளகு - 1 Tsp

  செய்முறை :

  உளுந்தை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  குக்கரில் நெய் விட்டு காய்ந்த மிளகாய், பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி ,பூண்டை போடவும்.

  அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் தக்காளி போட்டு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.

  ஊற வைத்துள்ள உளுந்தை போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றவும். 5-6 விசில் வரும் வரை காத்திருக்கவும்.

  விசில் முடிந்ததும் தானாக பிரஷர் இறங்கும் வரை காத்திருங்கள். பின் திறந்து தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும்.

  நெய், சீரகம், மிளகு போட்டு தாளித்து பருப்பில் ஊற்றவும். உளுத்தம் பருப்பு கூட்டு தயார். பரிமாறவும்.

  பார்க்க : 

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Food