வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும் : இருமல் , சளி , சுவாசப் பிரச்னைகளை போக்கும் அதிமருந்து தயார்..!
வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும் : இருமல் , சளி , சுவாசப் பிரச்னைகளை போக்கும் அதிமருந்து தயார்..!
துளசி கஷாயம்
இது ஆஸ்துமா, இருமல், சளி, முச்சுப் பிரச்னை போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணியாக இருக்கும். இதில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் , கிருமி மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன.
மக்கள் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு மருந்து மாத்திரைகளைக் காட்டிலும் கஷாயம் வீட்டு வைத்தியங்களையே பெரும்பாலும் நாடுகின்றனர். குறிப்பாக இந்த கொரோனா நேரத்தில் கஷாயம் தான் பெரும் நம்பிக்கையாக இருந்தது. அந்த வகையில் துளசி கஷாயம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படி தயாரிப்பது..? என்னென்ன நன்மைகள் இருக்கின்றன? என்று பார்க்கலாம்.
துளசி கஷாயம் ஆஸ்துமா, இருமல், சளி, முச்சுப் பிரச்னை போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணியாக இருக்கும். இதில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் , கிருமி மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன.
தேவையான பொருட்கள் :
துளசி – சில இலைகள்
தண்ணீர் – 2 கப்
இஞ்சி - 1 துண்டு
மிளகு தூள் – ½ tsp
பனை வெல்லம் – 1 tsp
செய்முறை :
துளசி இலைகள் நன்கு அலசி எடுத்துக்கொள்ளுகள். பின் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் அதில் சில இலைகளை அப்படியே போட்டு மீதம் உள்ள இலைகளை இடித்து சாறோடு அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தண்ணீர் 2 கொதித்ததும் மிளகுத்தூள் , இஞ்சி ( இடித்து போட வேண்டும்) , பனை வெல்லம் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பின் அவற்றை வடிகட்டி அதில் வேண்டுமென்றால் சில துளசி இலைகளை ஃபிரெஷாக சேர்த்து பருகலாம்.
அவ்வளவுதான் துளசி கஷாயம் தயார்.
இதை சற்று குடிக்கும் பதத்திலான சூட்டில்தான் குடிக்க வேண்டும். அப்போதுதான் தொண்டைக்கு இதமாக இருக்கும். சளி வெளியேறும். சளி , இருமலின் போது ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகலாம்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.