இணையத்தில் வைரலாகும் டல்கோனா காஃபி..! எப்படி செய்யுறதுனு தெரியுமா..?

”இதை ஒரு சேலஞ்ச் போல் மற்றவர்களையும் டேக் செய்து, இப்படி நீயும் செய்து புகைப்படம் ஷேர் செய்யவும் என டிரெண்டாக்கி வருகின்றனர்”

இணையத்தில் வைரலாகும் டல்கோனா காஃபி..! எப்படி செய்யுறதுனு தெரியுமா..?
டல்கோனா காஃபி
  • Share this:
இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது டல்கோனா காஃபி. பலரும் தங்கள் வீடுகளை செய்து பார்த்து அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதை ஒரு சேலஞ்ச் போல் மற்றவர்களையும் டேக் செய்து இப்படி நீயும் செய்து புகைப்படம் ஷேர் செய்யவும் என டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படி என்ன இந்த டல்கோனா காஃபியில் உள்ளது. செய்துதான் பார்க்கலாமே..!

தேவையான பொருட்கள் :

ப்ரூ அல்லது சன்ரைஸ் காஃபி தூள் - 2 Tsp


சர்க்கரை - 2 Tsp
சுடு தண்ணீர் - 2 Tsp

செய்முறை :

மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி 10 நிமிடங்களுக்கு கெட்டியாகும் வரைக் கிளறவும். அதன் நிறம் மாறும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

தற்போது கெட்டியான பதத்தில் கிரீம் போல் இருக்கும். இதை சூடாகவும் அல்லது குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்.

குளிர்ச்சியாக சாப்பிட நன்குக் காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்த பாலை கிளாஸில் ஊற்றி அதன் மேல் இந்த காஃபி கிரீமை லாவகமாக டெகரேட் செய்யவும். அதன் மேல் கொஞ்சம் காஃபி பொடியைத் தூவவும்.

சூடாகக் குடிக்க காய்ச்சிய பாலில் அப்படியே அந்த கிரீமை நிரப்பிக் குடிக்கவும். இவ்வளவுதான் இந்த டல்கோனா காஃபி.

பார்க்க :

 

 
First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading