எப்போது வேண்டுமானலும் சுவைக்கலாம் - வீட்டிலேயே Tomato Ketchup செய்ய ரெசிபி

Tomato Ketchup கடையில் வாங்கும்போது அதை பதப்படுத்தி விற்கக் கூடும். வீட்டிலேயே ஃபிரெஷாக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் சுவைக்கலாம்.

எப்போது வேண்டுமானலும் சுவைக்கலாம் - வீட்டிலேயே Tomato Ketchup செய்ய ரெசிபி
Tomato Ketchup
  • Share this:
சாட் உணவுகளை வீட்டில் செய்யும்போது அதற்கு தொட்டுக்கொள்ள பொருத்தமாக Tomato Ketchup தான் சுவைப்போம். எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி - 1 கிலோ


வெங்காயம் - 1 துண்டு
பூண்டு - 4 பற்கள்
பட்டை , கிராம்பு - 2சர்க்கரை - 1/4 கப்
வினிகர் - 1/4 கப்
உப்பு - 1 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp



செய்முறை :

தக்களியை நறுக்கி கடாயில் போட்டு வதக்குங்கள். அதோடு வெங்காயம் , பூண்டு, கிராம்பும் சேர்த்துக்கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கி தோல் சுருங்கியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

தட்டி ஆற வைத்து சூடு போனதும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்ததும் வடிகட்டியில் வடித்து திப்பிகளை எடுத்துவிடுங்கள்.

வடிகட்டிய தக்காளி சாற்றை கடாயில் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதோடு வினிகர், மிளகாய் தூள் சர்க்கரை சேருங்கள். நன்கு கொதிக்க விடுங்கள். தக்காளி தண்ணீர் இறுகி கெட்டியாகும் வரை கொதிக்க வேண்டும்.

கெட்டியாவிட்டதா என உறுதி படுத்த ஒரு துளியை தட்டில் ஊற்றி பாருங்கள். அது தண்ணீர் போல் ஓடாமல் திடமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் Tomato Ketchup தயார்.











Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 

 

 

 
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading