வெயிலுக்கு குளிர்ச்சியளிக்கும் தக்காளி ஜூஸ் - செய்முறை இதோ...

உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் தக்காளி ஜூஸ் குடிப்பதை வாரம் ஒரு முறையேனும் வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

வெயிலுக்கு குளிர்ச்சியளிக்கும் தக்காளி ஜூஸ் - செய்முறை இதோ...
தக்காளி ஜூஸ்
  • Share this:
தக்காளியில் வைட்டமின் C, வைட்டமின் A- வும் நிறைந்துள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வை மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தக்காளியில் இருக்கும் வைட்டமின் K இருப்பது எலும்புகளுக்கு நல்லது. பொட்டாசியம் நிறைந்தது என்பதால், இதய செயல்பாடுகளுக்கு முக்கியமான ஊட்டச்சத்தாக அமைகிறது. மேலும் இது இதயத்தையும் பாதுகாக்கிறது. புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது.

எனவே வாரம் ஒரு முறையேனும் தக்காளி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அதற்கு எப்படி தக்காளி ஜூஸ் போடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :


தக்காளி - 3
சர்க்கரை - தே. அ
எலுமிச்சை - அரை பாதி

செய்முறை :

தக்காளியை நறுக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு சர்க்கரையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் வடிகட்டியில் சாறை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்துகொள்ளுங்கள்.

 

அவ்வளவுதான் சூப்பரான தக்காளி ஜூஸ் தயார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading