மொறுமொறுப்பான தக்காளி தோசை செய்வது எப்படி?

மொறுமொறுப்பான தக்காளி தோசை செய்வது எப்படி?
தக்காளி தோசை
  • Share this:
தோசை என்றாலே நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தோசை பிடித்தமான உணவாக உள்ளது. இருந்தாலும் அவற்றை ஒரே மாதிரியாக செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் உண்பதற்கு நன்றாகதான் இருக்கும். அந்த வகையில், மொறுமொறுப்பான தக்காளி தோசை  செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான   பொருள்கள்:

புழுங்கல் அரிசி - ஒரு கப்,


பச்சரிசி - ஒரு கப்,

உளுத்தம்பருப்பு - அரை உழக்கு,

காய்ந்த மிளகாய் - 8,சோம்பு - ஒரு டீஸ்பூன்,

தக்காளி - 5 (நறுக்கவும்),

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:

அரிசியையும் பருப்பையும் நன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊறிய அரிசி, ஊளுந்தம் பருப்புடன், மேலே குறிபிட்ட மற்ற எல்லாவற்றையும் போட்டு நைஸாக அரைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து, தோசைக்கல்லில் நல்லெண்ணெய்விட்டு மாவை தோசை போல் ஊற்றிச் சுட்டெடுக்க வேண்டும். தக்காளி தொசை ரெடி.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading