மருத்துவப் பயன்கள் கொண்ட தூதுவளை ரசம் - எப்படி செய்வது..?

பித்தம், வாத நோய்கள் என பல வகையான பிரச்னைகளுக்கு தூதுவளை மருத்துவ குணம் நிறைந்தது.

மருத்துவப் பயன்கள் கொண்ட தூதுவளை ரசம் - எப்படி செய்வது..?
தூதுவளை ரசம்
  • Share this:
இறுமல், வயிற்று வலி, பித்தம், வாத நோய்கள் என பல வகையான பிரச்னைகளுக்கு தூதுவளை மருத்துவ குணம் நிறைந்தது. அதில் ரசம் எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை இலைகள் - கைப்பிடி அளவு


நெய் - 1 tsp
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2மிளகு - 1 tsp
சீரகம் - 1tsp
பூண்டு - 3
சாம்பார் பொடி - 3/4 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே.அ

'பிசிபெலா பாத்' செய்ய மசாலா பொடி - ஒரு ஸ்பூன் போதும் ருசி ஆளை மயக்கும்

தாளிக்க :

கடுகு - 1 tsp
சீரகம் - 1 tsp
நெய் - 1 tspசெய்முறை :

தூதுவளை இலைகளை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து நெய் விட்டு தூதுவளை இலைகளை சுருங்க வதக்கிக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

மிக்ஸியில் மிளகு ,சீரகம் , பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்ததும் வதக்கிய தூதுவளை இலைகளையும் அரைத்துக்கொள்ளுங்கள்.

இதய நோய், எலும்பு உறுதிக்கு உதவும் பிரண்டை துவையல் - 10 நிமிட செய்முறை இதோ...

கிண்ணத்தில் புளியைக் கரைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளியை கரைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக அரைத்த தூதுவளையை சேர்த்துக் கரைத்துக்கொண்டு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கறிவேப்பிலை கொத்தமல்லி சேருங்கள்.

தற்போது அந்தக் கலவையை அப்படியே அடுப்பில் வைத்து நுரை வரும் போது அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் இறுதியாக 1 1/2 கப் தண்ணீரை அதில் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள். அடுத்து தாளிக்க பொருட்களை சேர்த்து தாளித்து ரசத்தில் ஊற்றுங்கள். அவ்வளவுதான் தூதுவளை ரசம் தயார்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading