• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வெண்டைக்காய் புளித்தொக்கு : இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்..!

வெண்டைக்காய் புளித்தொக்கு : இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்..!

வெண்டைக்காய் புளித்தொக்கு

வெண்டைக்காய் புளித்தொக்கு

தேங்காய் அரைச்சு ஊத்தி செஞ்சு பாருங்க.. தேங்காய் பாலின் சாறு குழம்பில் இறங்கி அதன் சுவையை வேற லெவல் ஆக்கிடும்.

  • Share this:
    வெள்ளை சாதத்துடன் இந்த வெண்டைக்காய் புளித்தொக்கு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவையே தனி ரகம். அதோடு தேங்காய் அரைச்சு ஊத்தி செஞ்சு பாருங்க.. தேங்காய் பாலின் சாறு குழம்பில் இறங்கி அதன் சுவையை வேற லெவல் ஆக்கிடும். டிரை பண்ணி பாருங்க...

    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 200 கிராம்
    உப்பு - தே.அ
    எண்ணெய் - 2 tsp

    மசாலா வறுத்து அரைக்க

    தேங்காய்- 1 கப்
    வெந்தயம் - 1 tsp
    சீரகம் - 1 tsp
    காய்ந்த மிளகாய்- 6
    தனியா - 2 tsp
    எள் - 2 tsp
    அரிசி - 2tsp
    பூண்டு - 4
    மஞ்சள் பொடி - 1/4 tsp
    வெல்லம் - 2 tsp
    தண்ணீர் - 1/2 கப்

    தாளிக்க :

    எண்ணெய் - 1 tsp
    கடுகு - 1/2 tsp
    பெருங்காயத்தூள் - 1/4 tsp
    காய்ந்த மிளகாய் - 2
    கருவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    வெண்டைக்காயை முதலில் பிசுபிசுப்புப் போக வதக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு வதக்குங்கள். அதில் உப்பு தூவிக்கொள்ளுங்கள். பின் அதை தனியாக வைத்துவிடுங்கள்.

    அடுத்ததாக வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் வறுத்து பின் ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு வெல்லமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    இனி மாவு இல்லாமல் பூரி சுடலாம்.. எப்படி தெரியுமா?

    தற்போது கடாய் வைத்து வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து அதில் அரைத்த பேஸ்டை ஊற்றிக்கொள்ளுங்கள். பின் ஊற வைத்த புளியை கரைத்து 1/2 கப் தண்ணீருடன் ஊற்றிக்கொள்ளுங்கள். பின் ஐந்து நிமிடங்கள். நன்கு கொதிக்கவிடுங்கள்.

    இறுதியாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை சேர்த்து தாளித்து அதில் ஊற்றி கலந்துவிடுங்கள். அவ்வளவுதான் வெண்டைக்காய் தேங்காய் புளித்தொக்கு தயார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: