செட்டிநாடு சுவையில் தேங்காய் பாறை மீன் குழம்பு - எப்படி செய்வது..?

செய்து பாருங்கள் சுவையில் அனைவரும் அசந்து போவார்கள்.

செட்டிநாடு சுவையில் தேங்காய் பாறை மீன் குழம்பு - எப்படி செய்வது..?
மீன் குழம்பு
  • Share this:
செட்டிநாடு சுவையில் தேங்காய் பாரை மீனை பயன்படுத்தி எப்படி மீன் குழம்பு வைப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க


நல்லெண்ணெய் - 2 tbsp
சி.வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 6 பல்தக்காளி - 5
மஞ்சள் தூள் - 1 tsp
மிளகாய் தூள் - 21/2 tbsp
மல்லி தூள் - 3 டே ஸ்பூன்
சீரகம் - 11/2 tsp
மிளகு - 11/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே. அ
தேங்காய் - 1/2 கப்
புளி - எலுமிச்சை அளவு

குழம்பு கூட்டி வைக்க :

மீன் - 3/4 கிலோ
நல்லெண்ணெய் - 60 மில்லி
கடுகு - 1 tsp
குண்டு மிளகாய் - 6
வெந்தயம் - 1/2 tsp
கறிவேப்பிலை - 2 சிறிதளவு
சி.வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 20 கிராம்
இஞ்சி - 15 கிராம்செய்முறை :

முதலில் மீனை சுத்தம் செய்து எலுமிச்சை சாறு, மஞ்சள், உப்பு சேர்த்து மீன் வாடை போவதற்காக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அரைக்க கடாய் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்குங்கள்.

பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

அடுத்ததாக் தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி புளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு அதை சூடு ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.

பெண்களின் கருப்பைக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுத்தங்களி : இதோ செய்முறை..!

இதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக குழம்பு செய்ய கடாய் வைத்து எண்ணெயில் கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக சி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேருங்கள். பின் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்து மிளகாய் வாசனை போனதும் ஊறவைத்த மீன் சேர்த்து 4 நிமிடம் மட்டும் மீண்டும் கொதிக்க விடவும் பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு மீன் குழம்பு தயார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading