Home /News /lifestyle /

மாலையில் டீயுடன் மொறு மொறுவென சாப்பிட ’தட்டை’ : வீட்டிலேயே செய்ய ரெசிபி இதோ...

மாலையில் டீயுடன் மொறு மொறுவென சாப்பிட ’தட்டை’ : வீட்டிலேயே செய்ய ரெசிபி இதோ...

தட்டை

தட்டை

டீ டைமில் மொறு மொறுவென கொறிக்க ஏதாவதொரு ஸ்னாக்ஸ் கிடைத்தால் அதைவிட பர்ஃபெக்ட் டைம் எதுவும் இருக்க முடியாது.

    டீ டைமில் மொறு மொறுவென கொறிக்க ஏதாவதொரு ஸ்னாக்ஸ் கிடைத்தால் அதைவிட பர்ஃபெக்ட் டைம் எதுவும் இருக்க முடியாது. அப்படி வீட்டிலேயே செய்து சாப்பிட தட்டை ரெசிபி இதோ...

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்
    மைதா - 1 கப்
    ஓமம் - 1 tsp
    சீரகம் - 1 tsp
    நெய் - 2 tsp
    உப்பு - தே.அ
    எண்ணெய் - வறுக்க



    செய்முறை :

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்.

    பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து சப்பாத்தி பிசைவது போல் பிசைந்துகொள்ளுங்கள்.

    வறுக்க கடாயில் எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.

    தற்போது மாவை எலுமிச்சை அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.

    சாக்லெட் வால்நட் பிரவுனி இனி வீட்டிலேயே செய்யலாம்..! ஒரே நிமிடத்தில் செய்ய ரெசிபி இதோ...

    பின் அவற்றை தட்டை அளவுக்கு ஏற்ப சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் ஃபோர்க் ஸ்பூன் வைத்து ஓட்டை போடுங்கள். இதனால் எண்ணெயில் போடும்போது உப்பி வராது.

    பின் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து காய வைத்துள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

    அவ்வளவுதான் மாலை நேரத்தின் பர்ஃபெக்ட் ஸ்நாக்ஸ் தட்டை தயார்.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Evening Snacks

    அடுத்த செய்தி