முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 30 நிமிடங்களில் தாய் ஸ்டைலில் எக் பிரைடு ரைஸ் செய்வது எப்படி.? ரெசிபி இதோ.!

30 நிமிடங்களில் தாய் ஸ்டைலில் எக் பிரைடு ரைஸ் செய்வது எப்படி.? ரெசிபி இதோ.!

தாய் ஸ்டைல் எக் பிரைடு ரைஸ்

தாய் ஸ்டைல் எக் பிரைடு ரைஸ்

Thai Egg Fried Rice Recipe | மிக குறுகிய காலத்தில் தாய்லாந்து உணவுகள் இந்தியாவில் பிரபலம் அடைய காரணம் என்ன என்றால், இந்திய உணவு வகைகளுக்கும், அங்குள்ள உணவுகளுக்கும் இருக்கின்ற நெருங்கிய தொடர்புதான்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகெங்கிலும் வாழும் மக்கள் வெவ்வேறு வகையான உணவுக் கலாச்சாரங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அதில், பெரும்பாலான உணவு வகைகள் அந்தந்த பகுதிகளை தாண்டி மற்ற நாடுகளின் மக்களுக்கும் விருப்பமான உணவாக அமைகிறது. அதிலும் சிலர் உள்ளூர் வகை உணவுகளை சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்று எண்ணி, பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக, தாய்லாந்து உணவு வகைகள் இந்தியர்களை அதிகம் ஈர்த்து வருகின்றனர். தாய் கிரீன் சட்னி, பாட் தாய் நூடுல்ஸ், சிக்கன் சடாய், சோம் யம் சூப் போன்றவை உணவுப் பிரியர்களின் நாவுக்கு விருந்து அளிப்பதாக உள்ளன. மிக குறுகிய காலத்தில் தாய்லாந்து உணவுகள் இந்தியாவில் பிரபலம் அடைய காரணம் என்ன என்றால், இந்திய உணவு வகைகளுக்கும், அங்குள்ள உணவுகளுக்கும் இருக்கின்ற நெருங்கிய தொடர்புதான்.

இந்தியர்கள் பெரும்பாலும் சாதம், குருமா மற்றும் மசாலா சேர்த்த உணவுகளை விரும்பி உண்ணுகின்றனர். தாய்லாந்து மக்களின் உணவுத் தேர்வுகளும் இதைப் போலவே இருக்கிறது. ஆனால், சுவையளவில் மாறுபடுகிறது. ஆகவே, மிக எளிமையான தாய் உணவு ஒன்றை வீட்டிலேயே செய்து சாப்பிட்டுவிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கான தேர்வாக எக் ஃபிரைடு ரைஸ் அமைகிறது. இதனை 30 நிமிடங்களில் நீங்கள் தயார் செய்து விடலாம்.

Also Read : குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வேர்க்கடலை ஸ்னாக்ஸ் ரெசிபிகள்!

இந்த ரெசிபி மீது நறுக்கிய ஆம்லெட் துண்டுகள், வெள்ளரிக்காய், கொத்தமல்லி மற்றும் மீன் சாஸ் போன்றவற்றை தூவி, அதன் பிறகு சாப்பிட்டால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். குறிப்பாக, முட்டை மற்றும் மீன் சாஸ் சேர்க்கப்படுவதால் இது புரதச்சத்து நிறைந்த உணவாகும்.

எப்போது தயார் செய்யலாம்

சுவை மிகுந்த இந்த எளிமையான உணவை, நீங்கள் மதிய உணவுக்கு அல்லது இரவு உணவுக்கு தயார் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த உணவு பிடித்தமானதாக இருக்கும்.

Also Read : எலும்புகளைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுகளின் லிஸ்ட் - மறக்காமல் ஃபாலோ பண்ணுங்கள்!

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இப்போது முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை வெந்த பிறகு அதனை எடுத்து துண்டு, துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு இதனுடன் சாதம் சேர்த்து நன்றாக சூடேறும் வரை வதக்கவும்.
இதற்கு மேல் மீன் சாஸ், கொத்தமல்லி மற்றும் ஆம்லெட் துண்டுகள் ஆகியவற்றை சேருங்கள். நன்றாக கிளறிய பிறகு, அதன் மேல் வெள்ளரிக்காய் தூவி பரிமாறவும். (ஒருவேளை உங்களுக்கு மீன் சாஸ் சேர்ப்பது பிடிக்கவில்லை என்றால், அதற்குப் பதிலாக சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.)
First published:

Tags: Egg recipes, Food recipes, Lifestyle, Thailand