• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அசத்தலான சுவையில் இளநீர் பாயாசம் செய்ய தெரியுமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி

அசத்தலான சுவையில் இளநீர் பாயாசம் செய்ய தெரியுமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி

இளநீர் பாயாசம்

இளநீர் பாயாசம்

மிஸ் பண்ணிடாதீங்க..இன்னையே டிரை பண்ணி சாப்பிட்டு பாருங்க

  • Share this:
இளநீர் குடிப்பதே அமிர்தமாக இருக்கும். ஆனால் அதில் இப்படி சுவையான பாயாசம் செய்து சாப்பிட்டால் இன்னும் எத்தனை சுவை தரும். சொல்லும்போதே சுவைக்க தோன்றுகிறதா..? இன்னையே செய்து அசத்திடுங்க.

தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்
சர்க்கரை - 1/4 கப்
தேங்காய் வழுக்கை - 3/4 கப்
தேங்காய் பால் - 3/4 கப்
இளநீர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்



செய்முறை

பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள். 2 கப் பால் 1- 1/2 கப் பாலாக வருமாறு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்ததும் சர்க்கரை சேர்க்க வேண்டும். கலந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் கத்தரிக்காய் கிரேவி : இதுவரை செஞ்சதில்லையா..? இன்னைக்கே அசத்திடுங்க…

வழுக்கை தேங்காயை கொஞ்சம் இளநீர் ஊற்றி ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பால் நன்கு சூடு தணிந்து குளுமையானதும் அதில் அரைத்த வழுக்கைத் தேங்காய் , இளநீர் சேர்த்துக் கலக்கிவிடுங்கள்.

பின் தேங்காய் பாலும் சேர்த்துக் கலக்குங்கள். வாசனைக்கு ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது பாயாசம் ரெடி. அதை ஃபிரிஜ்ஜில் வைத்து குளுமையானதும் ஊற்றி குடிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: