சூப்பர் டேஸ்டில் இளநீர் பாயாசம் - ரெசிபி இதோ

Food Recipe |

சூப்பர் டேஸ்டில் இளநீர் பாயாசம் - ரெசிபி இதோ
இளநீர் பாயாசம்
  • Share this:
சுவையான தேங்காய் தண்ணீரை அப்படியே குடித்தாலே பாயாச சுவையில் இருக்கும். அதில் இப்படி பாயாசமே செய்து சாப்பிட்டால் நாவில் நீங்காத சுவையாக இருக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்


சர்க்கரை - 1/4 கப்
தேங்காய் வழுக்கை - 3/4 கப்
தேங்காய் பால் - 3/4 கப்இளநீர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்



செய்முறை

பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள். 2 கப் பால் 1- 1/2 கப் பாலாக வருமாறு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்ததும் சர்க்கரை சேர்க்க வேண்டும். கலந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

வழுக்கை தேங்காயை கொஞ்சம் இளநீர் ஊற்றி ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

முள்ளங்கி முட்டைப் பொடிமாஸ் அருமையான சுவையில் எப்படி சமைப்பது..?

பால் நன்கு சூடு தணிந்து குளுமையானதும் அதில் அரைத்த வழுக்கைத் தேங்காய் , இளநீர் சேர்த்துக் கலக்கிவிடுங்கள்.

பின் தேங்காய் பாலும் சேர்த்துக் கலக்குங்கள். வாசனைக்கு ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது பாயாசம் ரெடி. அதை ஃபிரிஜ்ஜில் வைத்து குளுமையானதும் ஊற்றி குடிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading