• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுவையான சுறா புட்டு செய்வது எப்படி?

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி?

சுறா புட்டு

சுறா புட்டு

சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. சுவையான சுறா புட்டு எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். 

தேவையான பொருட்கள்

சுறா மீன் - ஒரு கிலோ

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

பூண்டு - 10

இஞ்சி - ஒரு துண்டு

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சை சாறு - பாதி

கறிவேப்பிலை நல்லெண்ணெய் உப்பு



செய்முறை

முதலில் சுறா மீன்களை துண்டுப்போட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர், இதனை இட்லி தட்டில் ஒரு துணிப்போட்டு அதன் மீது வைத்த வேகவிடவும். இது ஆறியதும் தோல், முள்ளை எடுத்துவிட்டு மீன் துண்டுகளை மசித்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

மேலும் படிக்க... ஆம்பூர் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி?

பின்னர், மீன் சேர்த்து நன்றாக கிளறி அதன் நீர் போகும்வரை வதக்கவும். இறுதியாக, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு பிழிந்து கலந்தால் சுறா புட்டு ரெடி..

மேலும் படிக்க... ஸ்பைசி மட்டன் தொக்கு ரெசிபி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: