• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி...

கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி...

கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி

கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி

சுவையான காரசாரமான கிராமத்து ஸ்டைல் சட்னி செய்ய ரெசிபி...

  • Share this:
கிராமத்து ஸ்டைலில் இப்படி சட்னி அரைத்து கொடுத்தால் எவ்வளவு இட்லி இருந்தாலும் நமக்கு பத்தவே பத்தாது. அப்படி ஒரு அருமையான சுவை தரும் காரச்சட்னி எப்படி இருக்கும்?  ரொம்ப ரொம்ப சுலபமா கொஞ்சம் பொருட்களை வைத்து நொடியில் செய்து விடலாம். வாருங்கள் அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க...

 தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – ஒரு கப்,

புளி – சிறிதளவு

வெறும் மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவிற்கு

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி


செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து ஒரு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் 2 சிறு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை பிடித்து புளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் வெறும் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கைகளில் எடுத்தால் பந்து போல கெட்டியாக வர வேண்டும். பின்னர் அதன் மீது தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்து விட வேண்டும். தேங்காய் எண்ணெய் சேர்க்க விரும்பாதவர்கள் இதில் நல்லெண்ணெய் ஊற்றி சிறு தாளித்தம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதாங்க ரொம்ப சுலபமா கிராமத்து ஸ்டைலில் கார சட்னி ரெடி. இவற்றை இட்லி, தோசையுடன் சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையான சுவையுடன் இருக்கும்.

மேலும் படிக்க... வல்லாரை கீரை சட்னி செய்ய ரெசிபி...

இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: