நம்முடை உணவு முறைகளில் குழம்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. அவற்றை மிக ருசியாகவும் சுவை மிகுந்ததாகவும் செய்ய சில டிப்ஸ் இதோ...
1. சாம்பாரில் முள்ளங்கியை அப்படியே போடாமல் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
2. சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பார் சூப்பராக இருக்கும்.
3. வெந்தயக் குழம்புக்கு வெந்தயத்தைத் தாளிக்காமல், வெறும் வாணலியில் நன்றாக வறுத்துப் பொடி செய்து தூவினால், குழம்பு மணமாக இருக்கும்.
மேலும் படிக்க...உடல் எடையை குறைக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி ரெசிபி...
4. வெங்காய சாம்பார் செய்யும்போது, பெரிய வெங்காயம் வைத்துச் செய்யவும். சின்ன வெங்காயம் 7-8 வதக்கி சாம்பாருக்கு அரைக்கும் பொருட்களுடன் அரைத்து சாம்பாரில் கொட்டவும். மணம் வீட்டைத் தூக்கும்.
5. சாம்பாரில் காய்களுடன் ஒரு பெரிய நெல்லிக்காயையும் கட் பண்ணிப் போட்டு சமைத்துப் பாருங்கள். கல்யாண சாம்பாரையும் மிஞ்சிவிடும் சுவை. சத்தானதும் கூட.
6. துவரம் பருப்புடன் வெந்தயத்தை அரைமணி நேரம் ஊறிய பிறகு வேகவிடவும். வழக்கமான புளி ஊறவைத்து சாம்பார் செய்யவும். மற்ற சாம்பாரைவிட இதற்கு ருசி அதிகம்.
மேலும் படிக்க...மண மணக்கும் வெண்டைக்காய் மோர் குழம்பு... Published by: Vaijayanthi S
First published: January 29, 2022, 09:34 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.