Rava Pongal | ரவா பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையானதாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இந்த ரவை பொங்கலை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்...
பொங்கலில் விதவிதமான பொங்கல்கள் உள்ளன. அதில் ரவை பொங்கலும் ஒன்று. சில வகை பொங்கல்கள் உண்பதால் நமக்கு சோர்வு ஏற்பட்டு தூக்கம் வரும். ஆனால் இந்த ரவா பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையானதாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இந்த ரவை பொங்கலை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்...
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 3.5 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் - சிறிதளவு
ரவா பொங்கல்
செய்முறை:
கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி பாசிப் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த வெப்பத்தில் வறுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பருப்பு வெந்த பின் வறுத்து வைத்த ரவை சேர்த்து அத்துடன் உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.
.அதன் பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்க்கவும். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நிமிடங்கள் அவற்றை வறுத்து கறிவேப்பிலை மற்றும் மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக தாளித்து பொங்கலில் அதை சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவையான ரவை பொங்கல் ரெடி.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.