• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சண்டே கருவாட்டு குழம்பு வைச்சு சாப்புடுங்கள்.. அருமையாக இருக்கும்...

சண்டே கருவாட்டு குழம்பு வைச்சு சாப்புடுங்கள்.. அருமையாக இருக்கும்...

கருவாடில் குழம்பு வைத்தால் வீடே மணக்கும். பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் இந்த குழம்பை வீட்டில் செய்து பாருங்கள்.

  • Share this:
சண்டே என்றாலே மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாறுதலுக்கு கருவாட்டு குழம்பு செய்து கொடுங்கள்... அப்புறம் வாரம் வாரம் அதைதான் வீட்டில் உள்ளவர்கள் செய்ய சொல்லுவார்கள். இன்றும் தென் மாவட்டங்களில் அதிகமாக கருவாட்டு குழம்பைதான் வைத்து சாப்பிடுவார்கள். அது உடலுக்கு நல்லதும் கூட.

தேவையான பொருள்கள்

வஞ்சீர கருவாடு - 3 துண்டுகள்

தக்காளி - 1

பச்சை மிளகாய் -1

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

வறுத்து அரைக்க 

மிளகாய் வத்தல் - 4

கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு பற்கள் - 2

அரைக்க

தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

தாளிக்க

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 6

கறிவேப்பிலை - சிறிது



செய்முறை

கருவாடு துண்டுகளை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், பூண்டுப் பற்கள் எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

பிறகு தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்ஸ்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வெந்தயம் போடவும்.
வெந்தயம் சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.

பின்னர் கடைசியாக கருவாடை சேர்த்து கருவாடு வேகும் வரை கொதிக்க விடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.

குறிப்பு
1. கருவாடில் உப்பு இருப்பதால் உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.

2. எந்த வகை கருவாடு உபயோகித்தும் குழம்பு வைக்கலாம்.

மேலும் படிக்க... 

முட்டை கீமா ரெசிபி!   

குழந்தைகளுக்கு பிடித்தமான முட்டை பேஜோ!   

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ்... நிமிடத்தில் செய்திடலாம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: