சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொறியல்...! சூப்பராக செய்ய ரெசிபி இதோ...

”சர்க்கரைவள்ளிக் கிழங்கு குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது”

சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொறியல்...! சூப்பராக செய்ய ரெசிபி இதோ...
சர்க்கரைவல்லிக் கிழங்கு பொறியல்
  • Share this:
நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் எப்படி பொறியல் செய்யலாம் என்று பார்க்கலாம். இது குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 3


பெருங்காயத்தூள் - 1/2 tsp
கடுகு - 1/4 tsp
உளுத்தம் பருப்ப்ய் - 1/4 tspமஞ்சள் பொடி - 1/4 tsp
மிளகாய் பொடி - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 tbsp
உப்பு - தே . அளவுசெய்முறை :

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயை காய வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.

அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள கிழங்கை போடவும். அதில் தேவைக்கேற்ப உப்பு தூவவும்.

அடுத்ததாக மஞ்சள் மற்றும் மிளகாய் பொடி தூவி பிறட்டவும். சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வரும் வரை பிறட்டிக் கொண்டே இருங்கள்.

இது நிறைய எண்ணெய் உறிஞ்சும் என்பதால் அடிப்பிடிக்காமல் இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்துகொண்டே கிளறவும்.

பொன்னிறமாக வந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சர்க்கரைவல்லிக் கிழங்கு பொறியல் ரெடி..!Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading