சர்க்கரைவல்லி கிழங்கு மற்றும் ஓட்ஸ் கொண்டு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம்..! எப்படி தெரியுமா..?

கட்லெட்

குழந்தைகளுக்கு செய்துகொடுத்துப் பாருங்கள்.. இந்த சுவையை மறக்கவே மாட்டார்கள்..!

 • Share this:
  மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்துகொடுக்க நினைக்கிறீர்களா..? சக்கரைவல்லிக் கிழங்கு, ஓட்ஸ் பயன்படுத்தி அருமையான சுவையில் கட்லெட் செய்துகொடுங்கள்.

  தேவையான பொருட்கள் :

  சர்க்கரைவல்லிக் கிழங்கு - 4
  இஞ்சி, பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 tsp
  ஓட்ஸ் - 1/4 கப்
  பச்சை பட்டானி - 45 கிராம்
  சாட் மசாலா - 1 tsp
  மாங்காய் பொடி - 1 tsp
  எலுமிச்சை சாறு - 1 tsp
  சீரகப் பொடி - 1 tsp
  மிளகாய் பொடி - 1/2 tsp
  கரம் மசாலா - 1/4 tsp
  உப்பு - தே.அ
  கொத்தமல்லி - சிறிதளவு  செய்முறை :

  சர்க்கரைவல்லிக் கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி இரண்டையும் குக்கரில் போட்டு மசியும் வரை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  ஓட்ஸை சிவக்க கடாயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  கிழங்கு மற்றும் பட்டாணி வெந்ததும் அதை கைகளால் மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளுங்கள். பின் கட்லெட் போல் வடை அளவுக்கு தட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

  உடலுக்கு ஆரோக்கியமான அரைச்சுவிட்ட பச்சை பயறு குழம்பு... டிரை பண்ணி பாருங்க

  தவா வைத்து எண்ணெய் விட்டு ஒவ்வொன்றையும் வைத்து முன்னும் பின்னும் சிவக்க சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

  அவ்வளவுதான் அருமையான சுவையில் கட்லெட் தயார்.
  Published by:Sivaranjani E
  First published: