ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதுவரைக்கும் இல்லைனா இன்னைக்கே செய்ய ரெசிபி...

சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதுவரைக்கும் இல்லைனா இன்னைக்கே செய்ய ரெசிபி...

சுட்ட கத்தரிக்காய் குழம்பு

சுட்ட கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கத்தரிக்காய் குழம்பில் சுட சுட சாதம் பிசைந்து சாப்பிடுவதே தனி சுவைதான். அந்த வகையில் கத்தரிக்காயை சுட்டு குழம்பு வைத்து அதை சாப்பிடுவதில் இருக்கும் சுவை வேறெதிலும் இருக்க முடியாது. இந்த சுவையை நீங்களும் அனுபவிக்க வேண்டுமெனில் இந்த ரெசிபியை கவனியுங்கள்.

  தேவையான பொருட்கள் :

  கத்தரிக்காய் - 6

  காய்ந்த மிளகாய் - 10

  நல்லெண்ணெய் - 3 tbsp

  கடுகு - 1 tsp

  உளுத்தம் பருப்பு - 1 tsp

  கறிவேப்பிலை - சிறிதளவு

  புளி - எலுமிச்சை அளவு

  வெல்லம் - சிறு துண்டு

  உப்பு - தேவையான அளவு

  செய்முறை :

  கத்தரிக்காயை முழுசாக சுட வேண்டும் என்பதால் சொத்தை , பூச்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் குச்சி சொறுகி ஸ்டவ் நெருப்பில் சுற்றிலும் காட்டி சுட வேண்டும்.

  அதன் தோல் கருப்பாகி உதிர்ந்து விழும் வரை சுட வேண்டும். சுட்டதும் காய்ந்த மிளகாய்களையும் சுட்டு எடுக்க வேண்டும்,

  பின் கத்தரிக்காய் மற்றும் காய்ந்த மிளகாய்களை மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.

  ரவா லட்டு செய்தால் கல் போல் இறுகிடுதா..? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...

  இப்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

  பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும்.

  உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.

  இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடுங்கள்.

  அவ்வளவுதான் சுட்ட கத்தரிக்காய் குழம்பு தயார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Brinjal