சுண்டைக்காய் பருப்பு கடையல் செஞ்சிருக்கீங்களா..? அப்போ...மதிய உணவுக்கு பிளான் பண்ணிடுங்க

சுண்டைக்காய் பருப்பு கடையல் செஞ்சிருக்கீங்களா..? அப்போ...மதிய உணவுக்கு பிளான் பண்ணிடுங்க

சுண்டைக்காய் பருப்பு கடையல்

குக்கர் பிரஷர் இறங்கியதும் பருப்பை கல் சட்டியில் சேர்த்து நன்கு கடைந்துகொள்ளுங்கள். கடைந்து அதை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 • Share this:
  இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி தானா என முகம் சுழிக்கும் குடும்பத்தினருக்கு இப்படி வித்தியாசமான சுவையில் சுண்டைக்காய் பருப்பு கடையல் செய்து கொடுங்கள். ஒரு இட்லி சாப்பிடும் இடத்தில் நான்கு இட்லி கூடுதலாக செல்லும்.

  தேவையான பொருட்கள் :

  சுண்டைக்காய் - 1 கப்
  தக்காளி - 1
  வெங்காயம் - 1
  பூண்டு - 7 பற்கள்
  புளி - சிறிதளவு
  து. பருப்பு - 1 கப்
  மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  உப்பு - தே.அ

  தாளிக்க :

  எண்ணெய் - 2 ஸ்பூன்
  கடுகு - 1/2 ஸ்பூன்
  கருவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு
  காய்ந்த மிளகாய் - 2
  பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை  செய்முறை :

  பருப்பு , வெங்காயம் , தக்காளி, பூண்டு மற்றும் சுண்டைக்காய் , புளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் , உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

  பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  குக்கர் பிரஷர் இறங்கியதும் பருப்பை கல் சட்டியில் சேர்த்து நன்கு கடைந்துகொள்ளுங்கள். கடைந்து அதை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  பனீர் பாப்கார்ன் சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா..? உடனே செஞ்சு பாருங்க..!

  இறுதியாக தாளிக்க எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி பின் அதை கடைந்த குழம்பில் ஊற்றவும். பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  அவ்வளவுதான் சுண்டக்காய் பருப்பு கடையல் தயார். இது இட்லி , தோசைக்கு அருமையாக இருக்கும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sivaranjani E
  First published: