நெல்லிக்காய் தித்திப்பு செய்யத் தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க..ரசகுல்லாவே தோத்து போயிடும்..!

நெல்லிக்காய் தித்திப்பு

விட்டமின் சி இருப்பதால் குளிர்காலத்தில் உண்டாகக் கூடிய நோய் தொற்றுகளை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்த உதவும். இது சருமத்தை பளபளப்பாக்கவும் உதவுகிறது. எனவே நெல்லிக்காய் தித்திப்பு செய்து வைத்துக்கொண்டால் தினம் ஒன்று காலையில் சாப்பிடலாம்.

  • Share this:
நெல்லிக்காய் பொதுவாக மழைக்காலம், குளிர்காலத்தில்தான் அதிகம் கிடைக்கும். இதில் விட்டமின் சி இருப்பதால் குளிர்காலத்தில் உண்டாகக் கூடிய நோய் தொற்றுகளை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்த உதவும். இது சருமத்தை பளபளப்பாக்கவும் உதவுகிறது. எனவே நெல்லிக்காய் தித்திப்பு செய்து வைத்துக்கொண்டால் தினம் ஒன்று காலையில் சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 500 கிலோ
சர்க்கரை - 500 கிலோ
ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்



செய்முறை :

அரைக்கிலோ நெல்லிக்காயை நன்கு கழுவி அதன் காம்புகளை நீக்கிவிடுங்கள் . பின் ஃபோர்க்ஸ் ஸ்பூன் கொண்டு நெல்லிக்காயை சுற்றிலும் குத்தி ஓட்டை போட வேண்டும். கம்பி கொட்டை வரை குத்தி எடுக்க வேண்டும்.

பின் அவற்றை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் 10 நிமிடங்களுக்கு கொதித்தால் போதும். 10 நிமிடம் கழித்து தண்ணீரில் இருந்து எடுத்துவிடுங்கள்.

பின் கடாயில் அந்த நெல்லிக்காய்களை சேர்த்து அதில் அரைகிலோ சக்கரையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் சிறு தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

Gooseberry | Amla | குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

சர்க்கரை உறுகி அதோடு நெல்லிக்காயில் இருக்கும் வேக வைத்த தண்ணீரும் சேர்த்து சர்க்கரை பாகுவாக மாறும். பின் சர்க்கரை கைகளில் ஒட்டும் அளவிற்கு சிறு தீயில் கொதிக்க விட வேண்டும். அடிபிடிக்காமல் அருகிலேயே இருந்து கிளற வேண்டும். பாகு கெட்டிப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற விடுங்கள்.

ஆறியதும் பிலாக் சால்ட் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து தட்டுபோட்டு மூடி 2 நாட்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.

2 நாட்களுக்கு நன்கு ஊறிய பிறகு எடுத்து சாப்பிடலாம். அதை காற்றுபுகாத பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்த் 1 மாதம் வரை சாப்பிடலாம். தினம் ஒன்று கூட சாப்பிடலாம்.

 

 
Published by:Sivaranjani E
First published: