ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்ய தெரியுமா..? ரெசிபி இதோ...

ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அக்காரவடிசல் செய்ய தெரியுமா..? ரெசிபி இதோ...

அக்காரவடிசல்

அக்காரவடிசல்

அக்காரவடிசல் பொதுவாக ஆடிப்பூரம் அன்று செய்யப்படும். இது தவிர மார்கழி மாதங்களிலும் செய்து ஆண்டாளுக்கு படைக்கப்படுகிறது. இந்த இனிப்பு ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அக்காரஅடிசில் சக்கரை பொங்கல் போன்று அரிசி, பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்டாலும், இதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை முற்றிலுமாக பாலிலேயே வேக வைத்து செய்யப்படுகிறது. சர்க்கரை பொங்கலை காட்டிலும் வெல்லம் மற்றும் நெய் கூடுதலாக சேர்க்க வேண்டும். சுவையான அக்காரவடிசிலை இந்த பொங்களுக்கு செய்து கொடுங்கள்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

பாசிப்பருப்பு – ½ கப்

பால் – 1 ½ லிட்டர்

வெல்லம் – 2 ½ கப் –

நெய் – ½ கப்

முந்திரி பருப்பு – 10 – 15

காய்ந்த திராட்சை – 15 – 20

ஏலக்காய் – 3

கிராம்பு – 3

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ½ கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். இதனை லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த பின்னர் ஒரு முறை கழுவிக் கொள்ளவும். அதனுடன் 1 ½ லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும். குறைவான தீயில் வைத்து அரிசி பருப்பு மசிந்து வரும் வரை வேக வைக்கவும். பிறகு வெல்ல பாகு காய்ச்சுவதற்கு ஒரு பாத்திரத்தில் 2 ½ கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஓரளவு கொதித்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

அரிசி பருப்பு குழைந்த பின்னர் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். இதனை கலந்த பின்னர் 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு பானில் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரி பருப்புகளை சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து, உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரி திராட்சை அக்காரவடிசல் உடன் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து கலக்கவும். பின்னர் 3 ஏலக்காய் அல்லது 3 கிராம் லேசாக இடித்து சேர்த்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான அக்காரவடிசல் தயார்.

மேலும் படிக்க... பாரம்பரிய பொங்கல் செய்ய சில டிப்ஸ்!

Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Pongal