சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சை பயறு கட்லெட் நல்ல உணவு. இதை மாலை நேரத்தில் டீ டைமில் ஸ்னாக்ஸாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து உண்பார்கள்.
தேவையான பொருட்கள் :
முளைக் கட்டிய பச்சை பயறு - 2 கப்
ஸ்பிரிங் ஆனியன் - 1/2 கப்
ஓட்ஸ் - 1 கப்
இஞ்சி - 1 இஞ்ச்
தனியா பொடி - 1/2 tsp
பச்சை மிளகாய் - 1
கரம் மசாலா - 1/2 tsp
எண்ணெய் - வறுக்க
உப்பு - தே . அ
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் குழம்பு : புது சுவையில் ட்ரை பண்ணி பாருங்க..!
செய்முறை :
முதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு 1/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வையுங்கள்.
தற்போது கைப்பிடி அளவு பச்சை பயறை எடுத்து தனியாக வைத்துக்கொண்டு மீதம் உள்ள பயறுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
காராமணி பொரியல் எப்படி செய்வது..? இதோ ரெசிபி..!
அரைத்ததும் பாத்திரத்தில் கொட்டி அதில் எடுத்து வைத்துள்ள வைத்த பச்சை பயறு , வெங்காயம், கரம் மசாலா, தனியா பொடி, ஓட்ஸ் என எல்லாவற்றையும் சேர்த்து கலந்துக்கொள்ளுங்கள். அதோடு உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.
பின் கட்லெட் போல் தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அகலமான தவா வைத்து என்ணெய் விட்டு கொஞ்சம் போல் ஊற்றுங்கள்.
தட்டி வைத்துள்ள கட்லெடை மெதுவாக வைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றுங்கள்.
அடிப்பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடுங்கள். இப்படி இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான் முளை கட்டிய பச்சை பயறு கட்லெட் தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.