வாட்டும் வெயிலுக்கு அருமருந்து: கீரையில் தயிர் பச்சடி செய்வது எப்படி?

உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை இந்த  சிறுகீரை.

வாட்டும் வெயிலுக்கு அருமருந்து: கீரையில் தயிர் பச்சடி செய்வது எப்படி?
கீரை தயிர் பச்சடி
  • Share this:
வெயில் காலத்திற்கு உகந்த உணவாக கிராமத்து மக்கள் தினமும் தாங்கள் உண்ணும் உணவில் கீரையையும் தயிரையும் சேர்த்துக் கொள்வார்கள். சில சமயங்களில் அதில் பச்சடி செய்து உண்பதும் வழக்கம். அந்த வகையில் கீரையில் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்: 

சிறுகீரை - ஒரு கட்டு


தேங்காய் - அரை மூடி

முந்திரி - 5

பச்சை மிளகாய் - 4தயிர் - ஒரு கப்,

பால் - ஒரு கப்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

சீரகம் - கால் டீஸ்பூன்.

சிறு கீரை


செய்முறை: கீரையைக் கழுவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அதன் பிறகு கீரையை வேகவைத்து அந்த நீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எடுத்து வைத்த தேங்காய், முந்திரியை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைப் போட்டு சிவந்தபின் பச்சை மிளகாய், அரைத்த தேங்காய், முந்திரி விழுது சேர்த்துக் கிளற வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு வேகவைத்த கீரையை அத்துடன் சேர்த்து நன்றாக மசித்துவிட வேண்டும்.பின்னர் தயிர், பால், உப்பு சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

சிறு கீரையின் பயன்கள்: 

கீரையில் சுண்ணாம்புசத்து, இரும்புசத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன.நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுசத்து, ஆகியவையும் இதில் உள்ளன.

இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற கீரை இந்த  சிறுகீரை.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading