பருப்பும்...பசலைக் கீரையும்..! இப்படி கூட்டு செய்தால் அருமையாக இருக்கும்..!

சமைக்க சிறிது நேரமே ஆகக்கூடிய இந்த டிஷை டிரை பண்ணி பாருங்க..!

பருப்பும்...பசலைக் கீரையும்..! இப்படி கூட்டு செய்தால் அருமையாக இருக்கும்..!
பருப்பும்...பசலைக் கீரையும்..!
  • Share this:
கோடைக்காலத்தில் சாப்பிடுவதற்கு உகந்த உணவு பசலைக் கீரை பருப்புக் கூட்டு. அதோடு பருப்பு சேர்த்து கூட்டு வைப்பதால் கீரை மற்றும் பருப்பில் கிடைக்கும் ஊட்டச்சத்து உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தது. சமைக்க சிறிது நேரமே ஆகக்கூடிய இந்த டிஷ் எப்படி செய்யுறதுனு பாக்கலாம்..!

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1 கப்


பசலைக் கீரை - 2 கப்
எண்ணெய் - 1 tsp
வெங்காயம் - 1தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 இஞ்ச்
பூண்டு - 4
கரம் மசாலா பொடி - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அளவு
எலுமிச்சை சாறு - 1

தாளிக்க :

நெய் - 1 tsp
சீரகம் - 1 tsp
பூண்டு - 2 tsp
காய்ந்த மிளகாய் - 2



செய்முறை :

முதலில் பசலைக் கீரையை அலசி குக்கரில் போட்டு ஒரு விசில் வர வேக வைத்து எடுக்கவும். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொறிக்கவிடவும். பின் வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் கழுவி வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதற்க்ய் தேவையான 2-1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடுங்கள்.

4- 5 விசில் வந்ததும் இறக்கிவிடவும். பிரஷர் தானாக இறங்கியதும் மூடியை திறக்கவும். பின் வேக வைத்துள்ள பசலைக் கீரையை அதில் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

தாளிக்க நெய் காய்ச்சி அதில் சீரகம், கடுகு , காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு தாளித்து பருப்பில் கொட்டவும். இறுதியாக அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். சுவையான பசலைக் கீரை பருப்புக் கூட்டு தயார்.

 பார்க்க :
First published: April 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading