சில்லி வகை என்றாலே சிக்கனில் சமைத்தால்தான் ருசியாக இருக்கும் என்கிற கருத்து உண்டு. ஆனால் இப்படி மட்டனிலும் சமைத்தால் ருசியாக இருக்கும். இதுவரை சுவைத்ததில்லை எனில் செய்து பாருங்கள் சில்லி மட்டன்.
தேவையான பொருட்கள்
மட்டன் - ஒரு கப் (சிறு துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் - 4
தக்காளி - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது
தக்காளி சாஸ் - 1 tsp
சிவப்பு மிளகாய் சாஸ் - 1/2 tsp
சோள மாவு - 1 கப்
கரம் மசாலா பொடி - 1/2 tsp
மிளகாய் பொடி - 1 tsp
கறி மசாலா பொடி - 1/2 tsp
பச்சை மிளகாய் சாஸ் - 1/2 tsp
கேசரி பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தே. அ
குடை மிளகாய் - 1 கப்
மஞ்சள் பொடி - 1/2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
செய்முறை :
குக்கரில் நறுக்கிய மட்டன், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் மட்டன் நீரை வெளியே ஊற்றாமல் தனியாக எடுத்து வைக்கவும்.
எளிதான முறையில் சூப்பரான சுவையில் ’மஷ்ரூம் கீ ரோஸ்ட் ‘...! ரெசிபி இதோ...
கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி சேர்க்கவும். அடுத்ததாக மிளகாய் சாஸ், கறி மசாலா பொடி, பச்சை மிளகாய் சாஸ், மஞ்சள் என எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.
பின் குடை மிளகாயையும் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். அதோடு மட்டன் எலும்புத் துண்டுகளை சேர்க்கவும்.
அடுத்ததாக வேகவைத்த மட்டன் நீரை சேர்க்கவும். சோள மாவு மற்றும் கேசரி பொடி சேர்க்கவும். கலவையை நன்றாக கிளறவும்.
இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியனைத் தூவி இறக்கிவிடவும். சுவையான சில்லி மட்டன் தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.