இப்படி ஒரு ஆம்லெட் டிரை பண்ணி பாத்திருக்கீங்களா..? உடனே செய்ய ரெசிபி இதோ...

இப்படி ஒரு ஆம்லெட் டிரை பண்ணி பாத்திருக்கீங்களா..? உடனே செய்ய ரெசிபி இதோ...

ஸ்பானிஷ் ஆம்லெட்

ஸ்பானிஷ் ஆம்லெட்டிற்கு தேவையானதை தயாரிக்க 15 நிமிடங்களும், சமைக்க சுமார் 20 நிமிடங்களும் என மொத்தம் அதிகபட்சம் 35 நிமிடங்கள் ஆகும்.

  • Share this:
நமக்கு பசி வயிற்றை கிள்ளும் நேரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது. விரைவில் செய்ய வேண்டும் அதே நேரத்தில் செய்முறையும் எளிதாக இருக்க வேண்டும் என்பவர்களுக்காகவே இருக்கும் ஒரு விஷயம் தான் ஆம்லெட். எப்போது பார்த்தாலும் நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட்டை சாப்பிட்டு போரடிக்கிறது என்பவர்கள் ஸ்பானிஷ் ஆம்லெட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்பானிஷ் ஆம்லெட் சில பகுதிகளில் ஸ்பானிஷ் டார்ட்டிலா (Spanish tortilla) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு மற்றும் ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.

பெரும்பாலும் இது அறை வெப்பநிலையில் ஒரு கேக் துண்டுகள் போல பரிமாறப்படுகின்றன. பகல் நேரத்தில் ஷாப்பிங்கில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது வெளியில் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. நேரம் கடந்தாலும் வீடிற்கு சென்றுசாப்பிட்டு கொள்ளலாம் என பசியுடன் ஷாப்பிங்கை தொடர்வார்கள். இப்படிப்பட்ட பலருக்கு சத்தான டிஷ்ஷாக கை கொடுக்கும் இந்த ஸ்பானிஷ் ஆம்லெட்.

ஸ்பானிஷ் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டைகள் - 6
ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்
பெரிய உருளைக்கிழங்கு(நறுக்கியது) - 1
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகுதூள் - சுவைக்கு ஏற்ப தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவுசெய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் அதில் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து சேர்த்து நன்கு கலக்கி அடிக்கவும். பின்னர் ஒரு பெரிய வாணலியை (skillet pan) அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்திருக்கும் 3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். சூடான ஆலிவ் ஆயிலில் நறுக்கிய உருளைக்கிழங்கை கொட்டி மென்மையாகவும், பொன்னிறமாகவும் கிழங்கு மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் முட்டை கலக்கி வைத்திருக்கும் கிண்ணத்தில் இந்த கலவையை கொட்டி விட வேண்டும்.

வாழைப்பழமும் தயிரும் இருந்தால் போதும்..செலவே இல்லாமல் வெயிலுக்கு இதமான ஸ்மூதி ஜம்முனு குடிக்கலாம்..!

பின் அதே வாணலியில் வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுத்து ஏற்கனவே இருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் முட்டை கலவை உள்ள கிண்ணத்திற்கு வறுத்த வெங்காயத்தையும் மாற்றி நன்றாக அனைத்தையும் கலந்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது அதே வாணலியில் கிண்ணத்தில் இருக்கும் கலவையை ஊற்றி மூடி போட்டு சுமார் 3-4 நிமிடங்கள் ஆம்லெட்டின் இருபக்கத்தையும் வேக வைக்க வேண்டும். இருபக்கமும் சரியான பதத்திற்கு வெந்து முடிந்ததும், ஆம்லெட்டை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ரெசிபி ஆகும்.

நேரம்:

ஸ்பானிஷ் ஆம்லெட்டிற்கு தேவையானதை தயாரிக்க 15 நிமிடங்களும், சமைக்க சுமார் 20 நிமிடங்களும் என மொத்தம் அதிகபட்சம் 35 நிமிடங்கள் ஆகும். ஸ்பானிஷ் டிஷ்ஷான இது சுமார் 250 கலோரிகளை கொண்டது. காலை உணவாக இதை சாப்பிட்டால் நன்மை தரும். இந்த வகை ஆம்லெட்டை 6 முட்டைகளை கொண்டு தயாரித்தால் 4 பேர் வரை சாப்பிடலாம். சாப்பிடும் நபர்களை பொறுத்து முட்டைகளின் எண்ணிக்கை மாறும்.

 
Published by:Sivaranjani E
First published: