உங்கள் மாலை நேர டீ டைமுடன் ஏதேனும் சுவையான ஸ்னாக் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? அதற்கு ஒரு சூப்பர் ரெசிபி இருக்கு. உங்கள் வீட்டில் ரவை மற்றும் சில காய்கறிகள் இருந்தால் மட்டும் போதும், சில நிமிடங்களிலேயே இந்த ஸ்னாக்கை நீங்கள் செய்து சாப்பிடலாம்.
எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று போடுவதற்கு பதிலாக, இந்த ரவை வெஜ்ஜி ஸ்கொயர் ஸ்னாக்கை நீங்கள் தயார் செய்து சாப்பிடுங்கள். காட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். ஒருவேளை நீங்கள் காரமான உணவை விரும்பினால், அதில் சில கூடுதல் மிளகாய் தூள் மற்றும் சிவப்பு மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். சரி வாருங்கள் இந்த ஈசி ஸ்னாக்கை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1/2 கப்
வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
பீன்ஸ் - 1/4 கப் (நறுக்கியது)
காளான் -1/4 கப் (நறுக்கியது)
கேரட் - 1/4 கப் (நறுக்கியது)
சீஸ் க்யூப்ஸ் - 2
ஹெர்ப்ஸ் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தண்ணீர் - 2 கப்
பச்சை பட்டாணி - 1/4 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
ரீபைன்ட் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி பிறகு பட்டாணி, பீன்ஸ், கேரட் மற்றும் காளான் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்து அவற்றை 4 முதல் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. அவை நன்கு வதங்கிய பிறகு வாணலியில் ரவை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். இப்பொது அந்த கலவையில் உப்பு மற்றும் கொஞ்சம் ஹெர்ப்ஸ் சேர்க்கவும்.
3. பின்னர் இந்த கலவை கெட்டியாகும் வரை அதனை மூடி வைத்து சில நிமிடங்கள் சமைக்கவும். இப்போது தீயை அனைத்துவிட்டு சூடாக இருக்கும் கலவையில் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கிளறிவிடுங்கள்.
பால் கெட்டுப்போச்சா...? கவலையை விடுங்க...அதை வைத்து இவ்வளவு டிஷ் பண்ணலாம்..! ரெசிபியுடன் உள்ளே..
4. கடைசியாக, பொடிப்பொடியாக நறுக்கி வைத்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். அதனுடன் துருவிய சீஸ் க்யூப்ஸை சேர்த்துக்கொள்ளுங்கள்.
5. ஒரு அகலமாக தண்டில் வெண்ணெய் தடவிய காகிதத்தை வைத்து அதில் இந்த கலவையை 1/2 அங்குல தடிமன் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் இருக்கும்படி நன்கு பரப்பிவிடுங்கள். இப்போது அவற்றை 40 நிமிடங்கள் குளிரூட்டவும். குளிரூட்டப்பட்ட பிறகு, துண்டுகளாக வெட்ட வேண்டும்.
6. இப்போது ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அது சூடானதும், ரவை வெஜ்ஜி துண்டுகளை போட்டு ஷலோவ் பிரை செய்ய வேண்டும். ரவை வெஜ்ஜி தங்க-பழுப்பு நிறத்தில் மாறும் வரை வறுத்தெடுங்கள். அவ்வளவுதான் உங்கள் விருப்பப்படி தேநீர் வேளையில் இதனை சூடாக பரிமாறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.