ரவை வைத்து சூப்பரான வெஜ்ஜி ஸ்னாக்ஸ் ஐந்தே நிமிடத்தில் செய்யலாம் - மாலையில் செய்து கொடுங்கள்

வெஜ்ஜி ஸ்னாக்ஸ்

ரவை மற்றும் காய்கறிகள் கொண்டு செய்வார்கள். மேலும் இதனை நீங்கள் விரும்பும் சுவைக்கேற்ப செய்து அசத்தலாம். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்க்கலாம்.

  • Share this:
மாலை நேரத்தில் டீ, காபியுடன் பஜ்ஜி, சமோசா போன்ற பலகாரங்களை சாப்பிட பலர் விரும்புவர். இதற்காக, தினமும் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் வகைகளை செய்வது சற்று கடினமாக இருக்கும். ஏதேனும் வித்தியாசமாக செய்து அசத்தலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் இந்த ஸ்னாக் ரெசிபியை காட்டாயம் செய்து பாருங்கள். மற்ற ஸ்னாக்ஸ் வகைகளை விட இதனை செய்வதும் மிக எளிது.

இந்த ஸ்னாக்கின் பெயர் சுஜி வெஜ்ஜி ஸ்கொயர் ஆகும். இதனை ரவை மற்றும் காய்கறிகள் கொண்டு செய்வார்கள். மேலும் இதனை நீங்கள் விரும்பும் சுவைக்கேற்ப செய்து அசத்தலாம். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்க்கலாம். அல்லது நல்ல காரசாரமான வெஜ்ஜிஸ் வேண்டுமானால் சில்லி பிளேக்ஸ், மிளகாய் போன்றவற்றை சேர்த்து செய்யலாம். சரி, இந்த ஈஸியான ரெசிபியை எப்படி செய்வது என்பது பற்றி விரிவாக காணப்போம்.

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்
வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை பீன்ஸ் - 1/4 கப் (நறுக்கியது)
காளான் - 1/4 கப் (நறுக்கியது)
சீஸ் க்யூப்ஸ் - 2
மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
தண்ணீர் - 2 கப்
பட்டாணி - 1/4 கப்
கேரட் - 1/4 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
ரிஃபைன்ட் ஆயில் - தேவையான அளவு



செய்முறை:

* 2 நடுத்தர அளவு உள்ள உருளைக்கிழங்கினை நன்கு வேகவைத்து அவற்றின் தோலை நீக்கி பிறகு அதனை கைகளால் மசித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.

* பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், பொடிபொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பசளை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்த காய்கறிகளான பீன்ஸ், கேரட் மற்றும் காளான், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து சுமார் 4 முதல் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

குழந்தைகளுக்கு பிடித்த ரசமலாய்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..

* காய்கறி வதங்கியதும் அதனுடன் ரவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்களை சேர்க்கவும்.

* இப்போது கலவை கெட்டியாகும் வரை இன்னும் சில நிமிடங்கள் மூடி வைத்து வேகவைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

* கடைசியாக, நறுக்கிய மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்துக்கொள்ளவும். அதன்பிறகு துருவிய சீஸ் க்யூப்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.

* இப்போது 1/2 அங்குல தடிமன் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வெண்ணெய் காகிதம் போடப்பட்ட பாத்திரத்தில் கலவையை பரப்பவும். பிறகு வெஜ்ஜி கலவையை 40 நிமிடங்களுக்கு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிரூட்டவும். அதன் பிறகு, கலவையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

* இப்போது ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெஜ்ஜி துண்டுகள் மிருதுவாகும் வரை ஷாலோ பிரை செய்ய வேண்டும். துண்டுகளின் எல்லா பக்கங்களும் தங்க-பழுப்பு நிறமாகும் வரை வறுத்தெடுத்தால் போதும். அவ்வளவுதான், இந்த ருசியான ஸ்னாக்ஸை டீ மற்றும் காபியுடன் சேர்த்து பரிமாறலாம். குழநதைகள் கட்டாயம் விரும்பி சாப்பிடுவர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published: