ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ரவா லட்டு செய்தால் கல் போல் இறுகிடுதா..? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...

ரவா லட்டு செய்தால் கல் போல் இறுகிடுதா..? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...

ரவா லட்டு

ரவா லட்டு

நீங்களும் பண்டிகைக்காக பலகாரங்கள் செய்கிறீர்கள் எனில் ரவா லட்டு செய்ய இந்த ரெசிபியை டிரை பண்ணுங்க.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பண்டிகைக்காலம் தொடங்கியாச்சு. இனி அனைவரின் வீட்டிலும் பலகாரங்கள் செய்ய தயாராகிவிடுவார்கள். அப்படி நீங்களும் பலகாரங்கள் செய்கிறீர்கள் எனில் ரவா லட்டு செய்ய இந்த ரெசிபியை டிரை பண்ணுங்க.

  தேவையான பொருட்கள் :

  ரவை - 2 கப்

  நெய் - 6 tsp

  முந்திரி, திராட்சை - 1 கைப்பிடி

  பாதாம், பிஸ்தா, பூசணி விதை , முந்திரி - 1 கப்

  தேங்காய் துருவல் - 1/2 கப்

  சர்க்கரை - 1 1/2 கப்

  ஏலக்காய் - 10

  காய்ச்சிய சூடான பால் - 1/2 கப்

  செய்முறை :

  முதலில் நெய் விட்டு முந்திரி , திராட்சைகளை தனித்தனியே வறுத்துக்கொள்ளுங்கள்.

  பின் பூசணி விதை, பாதாம் என எடுத்து வைத்துள்ள 1 கப் பருப்பு வகைகளை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இது ஆறியதும் மிக்ஸியில் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

  பின் இன்னும் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய் துருவலை ஈரப்பதம் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  எலுமிச்சை ஊறுகாயில் ஒளிந்திருக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் இதோ..! 

  பின் அதிலேயே இன்னும் கொஞ்சம் நெய் விட்டு ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் வறுக்க வேண்டும். இல்லையெனில் கருகிவிடும்.

  எல்லாம் முடிந்த பின் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

  பின் அரைத்த சர்க்கரையை ரவையில் சேர்த்து கிளறவும். பின் வறுத்த தேங்காய், அரைத்த நட்ஸ் பொடிகளை சேர்த்து கலக்க வேண்டும்.

  பின் முந்திரி திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக காய்ச்சிய பாலை சேர்த்து கலந்துவிடுங்கள்.

  திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள் : தெரிந்துகொண்டால் தினமும் சாப்பிடுவீங்க...

  கொஞ்சம் கையில் மாவு ஒட்டும் அளவுக்கு இருந்தாலும் பிரச்சனை இல்லை. கலந்துவிட்டதும் தட்டு போட்டு 2 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

  2 நிமிடங்கள் கழித்து பார்த்தால் உருண்டை பிடிக்கும் பதத்தில் இருக்கும். கையில் நெய் தடவிக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும்.

  இப்படி செய்தால் மாவு இருகாது. கடித்து சாப்பிடவும் சாஃப்டாக இருக்கும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Laddu