• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சப்பாத்தி மிருதுவாக செய்ய சில டிப்ஸ்...

சப்பாத்தி மிருதுவாக செய்ய சில டிப்ஸ்...

சப்பாத்தி

சப்பாத்தி

மாவு பிசைந்தவுடன் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  சப்பாத்தி இடும்போது ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக இடுங்கள். அடுப்பில் தீ அதிகமாக இருக்க வேண்டும். சப்பாத்தியை தோசைக்கல்லில் இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது இலேசாக எண்ணெயைத் தடவினால் போதும்.

  • Share this:
சப்பாத்தி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் நெருப்பில் அல்லது தோசைக் கல்லில் சூடுபடுத்தி தயாரிக்கப்படுகிறது.

சப்பாத்திக்கு சில டிப்ஸ்:

1. ஒரு கப் கோதுமை மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அத்துடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பெளடரையும் ஒரு ஸ்பூன் எண்ணெயையும் தகுந்த உப்புடன் சேர்த்து சற்று சூடான நீரை உபயோகித்து சற்று இளக்கமான மாவை பிசைந்தால் நன்றாக இருக்கும்.

2. மாவு பிசைந்தவுடன் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  சப்பாத்தி இடும்போது ரொம்பவும் மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக இடுங்கள். அடுப்பில் தீ அதிகமாக இருக்க வேண்டும். சப்பாத்தியை தோசைக்கல்லில் இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது இலேசாக எண்ணெயைத் தடவினால் போதும்.

3. ஒரு துணியை வைத்துக் கொண்டு சப்பாத்தியின் இரு பக்கங்களையும் அழுத்தினால் சப்பாத்தி புஸ்ஸென்று உப்பிக்கொண்டு வரும்.

4. அல்லது நல்ல தீயில் 2 வினாடிகள் இரு பக்கங்களையும் போட்டெடுத்து, பிறகு ஒரு கிடுக்கியால் பிடித்துக் கொண்டு நேரடியான தீயில் இரு பக்கங்களையும் வேக வைத்தால் சப்பாத்தி மிக மிக மெதுவாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: