சிக்கன் 65 சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் - இதோ ரெசிபி

சாம்பார், ரசம் போன்ற குழம்பு வகைகளுக்கு சேனைக்கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும்.

சிக்கன் 65 சுவையில் சேனைக்கிழங்கு வறுவல் - இதோ ரெசிபி
சேனைக்கிழங்கு வருவல்
  • Share this:
சாம்பார் , ரசம் போன்ற குழம்பு வகைகளுக்கு சேனைக்கிழங்கு வறுவல் சுவையாக இருக்கும். அதை இப்படி கறி சுவையில் செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ


வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 tspஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
தேங்காய் - 1 துண்டு
சோம்பு - 1 tsp
பட்டை - 1/2 துண்டு
சோம்பு - 1 tsp
மிளகு - 1/2 tsp
சீரகம் - 1/4 tsp
கிராம்பு - 3
எண்ணெய் - தே.அ
உப்பு - தே.அசெய்முறை :

முதலில் தேங்காய், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, சீரகம் ஆகிவற்றை மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சேனைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கடாயில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வையுங்கள்.

வெங்காய புலாவ் செய்ய தெரியுமா..? இல்லையெனில் இங்கே கிளிக் செய்க...

வெந்ததும் தனியாக தட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக கொஞ்சம் போல் கடாயில் எண்ணெய் விட்டு சேனைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்த்து தாளித்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.

பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் சேனைக்கிழங்கு சேர்த்து அதோடு மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள்.

2 நிமிடங்கள் வதக்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்குங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே வேக வைக்க கொஞ்சம் உப்பு சேர்த்தது நினைவிருக்கட்டும்.

 

தற்போது நன்கு வதங்கி சற்று மொறுமொறுவென மாறியதும் அடுப்பை அனைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading