காலை உணவுக்கு இதை விட டேஸ்ட்டியா வேறென்ன வேணும்? சேமியா பிரியாணி ரெசிபி இதோ..

சேமியா பிரியாணி

சேமியாவில் சுவையான பிரியாணி செஞ்சு வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

 • Share this:
  சேமியாவில் சுவையான பிரியாணி செஞ்சு வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  சேமியா - 1 பாக்கெட்
  வெங்காயம் - 3
  தக்காளி - 1
  பட்டை - 1 இஞ்ச்
  கரம் மசாலா - 2 ஸ்பூன்
  எண்ணெய் - 2 tsp
  நெய் - 2 tsp
  ஏலக்காய் - 2
  கிராம்பு - 2
  முட்டை - 3
  மல்லி, புதினா - ஒரு கப்பிடி
  பிரியாணி மசாலா - 2 tsp
  உப்பு - தே. அளவு
  எலுமிச்சை - கால் பகுதி  செய்முறை :

  சேமியாவை முதலில் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பொன்னிறமாக இருக்க வேண்டும்.

  கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்கவும்.

  அடுத்தது வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளவும்.  நன்கு வதங்கியதும் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றுங்கள். அதோடு மிளகாய் தூள் சேர்த்த்க்கொள்ளுங்கள்.

  அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருங்கள். பின் மல்லி மற்றும் புதினா சேர்க்கவும்.

  அடுத்ததாக தண்ணீர் 2 கிளாஸ் சேர்கவும். உப்பு சேர்க்கவும். பிரியாணி மசாலாவும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு எலுமிச்சை சாறு ஊற்றவும்.

  அடுத்ததாக சிறிது நேரம் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து பிறட்டவும். அடுத்ததாக பிரியாணிக்கு தம் போடுவதுபோல் சிறு தீயில் வைத்து மூடிவிடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து பார்க்க நன்கு வெந்து உதிரி உதிரியாக வரும். இறக்கி விடுங்கள்.

  அவ்வளவுதான் சுவையான சேமியா பிரியாணி தயார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: