சுவையான சேமியா தயிர் சாதம் செய்வது எப்படி?

Food Recipe |

சுவையான சேமியா தயிர் சாதம் செய்வது எப்படி?
சேமியா தயிர் சாதம்
  • Share this:
பொதுவாக நாம் அனைவரும் வெயில் நாட்களில் மட்டும் அல்லாது எல்லா காலங்களிலும் நமது உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். பிரியாணி சாப்பிட்டாலும் கடைசியாக தயிர் சாதத்துடந்தான் தனது மத்திய உணவை முடிப்பான் கிராமத்தான். அப்படிப்பட்ட தயிர் சாதத்தை அரிசியில் மட்டும் அல்லாமல் சோமியாவிலும் செய்யலாம். இதோ அதற்கான ரெசிபி.

தேவை பொருட்கள்:

சேமியா - 2 கப்,


வெங்காயம் - ஒன்று

தயிர் -2 கப்,

பால் - ஒரு கப்,பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), 3

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

முந்திரி - 5

சேமியா


செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்கள் சேர்க்க வேண்டும். அதன் பின் நன்றாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். சேமியா நன்றாகக் குழைய வெந்தபின் எடுத்து அதனை ஆற வைக்கவும். பிறகு தயிர், பால் சேர்த்து நன்றாகக் கலக்கி, சிறிது நேரம் கழித்துப் பரிமாறினால் சேமியா தயிர் சாதம் ரெடி.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading