• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இவ்வளவு ஈசியா சாம்பார் சாதம் செஞ்சிடலாமா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே...

இவ்வளவு ஈசியா சாம்பார் சாதம் செஞ்சிடலாமா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே...

சாம்பார் சாதம்

சாம்பார் சாதம்

சைவப்பிரியர்களுக்கு சாம்பார் சாதம் பிரியாணி போன்றது.

  • Share this:
சாம்பார் சாதமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவுதான். அதுவும் சைவப்பிரியர்களுக்கு சாம்பார் சாதம் பிரியாணி போன்றது. அப்படிப்பட்ட சாம்பார் சாதத்தை மிக எளிதான முறையில் எப்படி குக்கரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்கறிகள் - உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
பட்டாணி - ( தேவைப்பட்டால் )
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 10
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தே.அ

தாளிக்க :

எண்ணெய் - 4 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வர மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

அனைத்து வேலைகளையும் செய்யும் முன் அரிசி பருப்பை கழுவி ஊற வைத்துவிடுங்கள். புளியும் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையே காய்கறிகளை நறுக்கி தயார் செய்துகொள்ளுங்கள்.

இப்போது ஊற வைத்த அரிசி மற்றும் காய்கறிகள் , சாம்பார் பொடி, மஞ்சள் தூள் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கருப்பு உளுந்து மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

அடுத்ததாக கரைத்த புளிக்கரைசல் தண்ணீரோடு மொத்தம் 6 டம்ளர் தண்ணீர் வைக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக 1 கிளாஸ் ஊற்றலாம். தண்ணீரானது நீங்கள் அரிசி ஊற வைத்த ஆழாக்கின் அளவில் எடுக்க வேண்டும்.

இப்போது குக்கரி மூடி போட்டு மூடி 4-5 விசில் விட வேண்டும். விசில் முடிந்ததும் மூடியை திறந்து நன்கு கிளறிவிட வேண்டும்.

இப்போது தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளதை தாளித்து சாதத்தில் கொட்டி கிளறவும். கொத்தமல்லியை இறுதியாக சேர்த்து கிளறவும்.

அவ்வளவுதான் சாம்பார் சாதம் தயார். இதற்கு அப்பளம், ஊறுகாய் தொட்டுக்கொள்ள பக்காவான பொருத்தமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: