குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்..!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரிங்க் முறுக்கு : வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்..!
ரிங்க் முறுக்கு
  • Share this:
குழந்தைகள் வீட்டில் ஏதாவது கொறிக்க வேண்டும் என கேட்டு அடம்பிடித்தால் இந்த ring முறுக்கு செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவார்கள். எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 1 கப்


மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
சீரகம் - 1 tspமிளகு - 1 tsp
எண்ணெய் - 2 tsp
எண்ணெய் - வறுக்க தே . அளவு
உப்பு - தே . அளவுசெய்முறை :

கடாய் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விடுங்கள்.

அடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், மிளகு ( இடித்து போடவும்) உப்பு என சேர்த்து தண்ணீரை சூடாக்குங்கள்.

ஒரு கொதி வந்ததும் அதில் அரிசி மாவை சேர்த்து கிளறுங்கள். கட்டிகளாக இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

போர் அடிச்சா மாலையில் சூடாக தேங்காய் பால் கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க..!

பின் மாவு சப்பாத்திக்கு பிசையும் பதத்தில் இருக்க வேண்டும். கிளறியதும் ஆற விடுங்கள். ஆறியதும் கைகளால் பிசைந்துகொள்ளுங்கள். பின் ஈரத்துணி போட்டு மூடி அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

ஊறியதும் மாவை கைகளில் நீள வாக்கில் சுருட்டுங்கள். பின் வட்டமாக மடித்து முணைகளை மூடிவிடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக வட்டமாக சுருட்டிக்கொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இந்த முறுக்கை போட்டு வறுத்து எடுங்கள். பொன்னிறமாக வரும்போது எடுங்கள்.

அவ்வளவுதான் இப்படி ஒவ்வொன்றாக போட்டு எடுக்க ரிங் முறுக்கு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போர் அடித்தால் சாப்பிடலாம்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 

 
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading