Home /News /lifestyle /

மாலை நேரத்தில் சூடாக சாப்பிட வெண்ணெய் புட்டு : எளிமையான முறையில் உடனே செய்யலாம்

மாலை நேரத்தில் சூடாக சாப்பிட வெண்ணெய் புட்டு : எளிமையான முறையில் உடனே செய்யலாம்

வெண்ணெய் புட்டு

வெண்ணெய் புட்டு

மாலை நேரத்தில் ஏதாவது செய்து சாப்பிடலாமே என தோன்றினால் சூடாக வெண்ணெய் புட்டு செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

அரிசி - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 கப்
வெல்லம் அ சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 2
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்



செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு இரண்டு நிமிடங்களுக்கு ஊற வேண்டும்.

அரிசியை மட்டும் மிக்ஸியில் போட்டு மைய தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது பாத்திரத்தில் கடலை பருப்பு கொட்டி 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். 10 நிமிடம் போதும்.

அட்டகாசமான சுவையில் ருசிக்கலாம் ’சில்லி மட்டன்’...! இதோ ரெசிபி...

வெந்ததும் அரைத்து வைத்துள்ள அரிசியை கொட்டிக் கிளறுங்கள். கிளறிக்கொண்டே இருக்க வெந்து கெட்டிப் பதத்திற்கு வரும்.

அந்த சமயத்தில் வெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் நன்குக் கிண்டிக் கொண்டே இருங்கள். ஏலக்காய் தட்டிப் போடுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக தேங்காய் துருவலை போட்டு கிளறுங்கள். அதோடு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் சுவையான வெண்ணெய் புட்டு தயார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி