குளிருக்கு இதமான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் சூப் : எப்படி செய்வது தெரியுமா..?

குளிருக்கு இதமான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் சூப் : எப்படி செய்வது தெரியுமா..?

சிக்கன் சூப்

 • Share this:
  குளிர்காற்று இதமாக வீசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மனம் சூடாக எதையாவது சாப்பிடலாமா என்று ஏங்கும். குறிப்பாக பலரும் காரமான சுவையில் சூப்பரான சிக்கன் சூப் குடிக்கலாமா என்றுதான் ஏங்குவார்கள்.இந்த சிக்கன் சூப் கடையில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே அருமையாக எளிமையாக செய்யலாம். இந்த பருவநிலைக்கு சளி , இருமல் இருந்தாலும் இந்த சிக்கன் சூப் அருமையாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  சிக்கன்- 150 கிராம்
  வெங்காயம் - சின்னது 1
  மிளகு - -1/4 tbsp
  சோம்பு - 1/4 tbsp
  மிளகு தூள் - 1/2 tbsp
  இஞ்சி - 1 tbsp
  பூண்டு - 1 tbsp
  பச்சை மிளகாய் - 1
  சோளமாவு - 1/2 கப்
  உப்பு - 1/2 tbsp
  கொத்தமல்லி - சிறிதளவு
  ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு
  எண்ணெய் - 1 tbsp
  தண்ணீர் - 1 லிட்டர்



  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  பின் பச்சை மிளகாய், இஞ்சி , பூண்டு , மிளகு, சோம்பு சேர்த்து வதக்கவும்.

  அடுத்ததாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வேகும் வரை வதக்கவும்.

  வதங்கியதும் தண்ணீர் சேர்த்து அதோடு உப்பு , ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து தட்டு போட்டு மூடி கொதிக்கவிடுங்கள்.

  ’சில்லி எக்ஸ்’... இதுவரை சாப்பிட்டதே இல்லையா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

  கால் அளவு தண்ணீர் குறைந்ததும் சோள மாவை 1 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதை ஊற்றி மீண்டும் கிளறியவாறு கொதிக்க விடுங்கள்.

  சூப் கெட்டிப் பதம் வந்ததும் கொத்தமல்லி, மிளகுத்தூள் தூவி அடுப்பை அனைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் சூப் தயார்.



  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sivaranjani E
  First published: