வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய மாங்காயை வைத்து பலரும் ஊறுகாய் போடவும், குழம்பில் சேர்க்கவும் தான் யோசிப்பார்கள். ஆனால் இப்படி அருமையான சட்னி கூட செய்யலாம் தெரியுமா..? ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் – ஒரு கப்
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் – 4 துண்டுகள்
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் – 1
தாளிக்க கடுகு – 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மாங்காயை எடுத்து நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் தேங்காயையும் எடுத்து துருவிக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மாங்காய், தேங்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அதன்பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
இப்போது புளிப்பான மாங்காய் சட்னி ரெடி. இது கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி போன்ற உபாதைகள் வருவது குறையும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.