• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Diwali Snacks : தீபாவளிக்கு செய்யும் ரவா லட்டு கல்லு மாதிரி இல்லாம சும்மா மிருதுவா வரனுமா..? அதுக்கு இந்த டிப்ஸை படிங்க...

Diwali Snacks : தீபாவளிக்கு செய்யும் ரவா லட்டு கல்லு மாதிரி இல்லாம சும்மா மிருதுவா வரனுமா..? அதுக்கு இந்த டிப்ஸை படிங்க...

ரவா லட்டு

ரவா லட்டு

சிலர் வீட்டில் ரவா லட்டு பிடித்தால் சாப்பிடும்போது கடிக்கவே முடியாதபடி கல்லைக் கடிப்பதுபோல் இருக்கும்.

  • Share this:
தீபாவளி மட்டுமல்லாது எந்த பண்டிகையானாலும் ரவா லட்டுக்கு இடமிருக்கும். சிலர் வீட்டில் ரவா லட்டு பிடித்தால் சாப்பிடும்போது கடிக்கவே முடியாதபடி கல்லைக் கடிப்பதுபோல் இருக்கும். சிலர் வீட்டில் இதை கிண்டலும் செய்வார்கள். இனியும் இந்த கிண்டல்களுக்கு ஆளாகாமல் சூப்பராக ரவா லட்டு செய்து அசத்திவிடுங்கள்.. அதற்கான ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள் :

ரவை - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் - 1 ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 1/4 கப்
முந்திரி - கையளவு
உலர் திராட்சை - சிறிதளவு



செய்முறை

முதலில் கடாய் வைத்து நெய் விட்டு முந்திரி, திராட்சைகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் விட்டு ரவையை கொட்டி வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரையை மிக்ஸியில் பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள். பின் ரவையையும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள்.

Diwali Snacks : தீபாவளினாலே முறுக்குதான்... அதை பக்குவமா எப்படி சுடனும் தெரியுமா..? எளிமையான ரெசிபி இதோ...

அரைத்த ரவையை கிண்னத்தில் கொட்டி அதில் வறுத்த முந்திரி திராட்சை மற்றும் 1 ஸ்பூன் நெய் விட்டு பிசைந்துகொள்ளுங்கள்.

பிடிக்க ஏதுவாக காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசைந்துகொள்ளுங்கள். உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் பால் ஊற்ற வேண்டாம்.

தற்போது எலுமிச்சை அளவு மாவை எடுத்து லட்டு போல் உருட்டுங்கள். இப்படி ஒவ்வொன்றாக உருட்டி எடுத்தால் ரவா லட்டு மிருதுவாக தயாராகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: