காலை உணவுக்கு சுட சுட ரவா இட்லி ரெசிபி இதோ..

ரவா இட்லி

ரவா உப்மா செஞ்சாலே வீட்டில் யாருக்கும் பிடிக்கலையா ? அப்ப இப்படி இட்லி செஞ்சி பாருங்க..

 • Share this:
  காலை உணவுக்கு செய்ய எதுவுமே இல்லை..ரவை தான் உள்ளது எனில் அதில் உப்புமா செய்தால் சிலருக்கு பிடிக்காது. ஆனால் இப்படி ரவையை வைத்து அருமையாக இட்லி செய்துவிடுங்கள்.அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.

  தேவையான பொருட்கள் :

  ரவை - 1 கப்
  எண்ணெய் - 1 Tbsp
  உளுத்தம்பருப்பு - 1 Tsp
  கடலை பருப்பு - 1 Tsp
  கடுகு - 1/2 Tsp
  இஞ்சி - 1 துண்டு
  பச்சை மிளகாய் - 2
  கருவேப்பிலை - சிறிதளவு
  கேரட் - 1 கப் ( துருவியதி )
  வெங்காயம் - 1
  கெட்டி தயிர் - 1/2 கப்
  தண்ணீர் - 3/4
  உப்பு - தே.அ
  பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

  Also Read : வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் ’டிஃபன் சாம்பார்’ எப்படி செய்வது..? ரகசிய ரெசிபி இதோ..  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

  பின் பச்சை மிளகாய் , கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக துருவிய கேரட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

  இறுதியாக ரவை சேர்த்து பிரட்டி வறுத்துக்கொள்ளுங்கள்.

  பின் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவிடுங்கள்.

  Also read : குழந்தைகளுக்கு இந்த மாதிரி சாப்பாத்தி செஞ்சி கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..  ஆறியதும் கால் கப் தண்ணீர் மற்றும் கெட்டித் தயிர் ஊற்றி கெட்டி பதத்திற்கு கலந்துகொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.பின் அதை தட்டுபோட்டு மூடி 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.

  10 நிமிடங்கள் கழித்து அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துவிட்டு பின் இட்லி தட்டில் ஒரு கரண்டி எடுத்து இட்லி போல் தட்டில் பரப்புங்கள்.

  இப்படி ஒவ்வொன்றாக செய்து இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேக வையுங்கள். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி இட்லியை எடுத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் அருமையான ரவா இட்லி தயார்.

  இதற்கு சாம்பார் கெட்டிச்சட்னி பொருத்தமாக இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: