காலை உணவுக்கு ஆரோக்கியமான வகையில் ரவா இட்லி எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

காலை உணவுக்கு ஆரோக்கியமான வகையில் ரவா இட்லி எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

ரவா இட்லி

ரவையில் உப்புமா செய்தால் சிலருக்கு பிடிக்காது. இருப்பினும் அவசரத்திற்கு உடனே இப்படி ரவையை வைத்து அருமையாக இட்லி செய்துவிடுங்கள்...

 • Share this:
  காலை உணவுக்கு செய்ய எதுவுமே இல்லை..ரவை தான் உள்ளது எனில் அதில் உப்புமா செய்தால் சிலருக்கு பிடிக்காது. இருப்பினும் அவசரத்திற்கு உடனே இப்படி ரவையை வைத்து அருமையாக இட்லி செய்துவிடுங்கள்...அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள்.

  தேவையான பொருட்கள் :

  ரவை - 1 கப்
  எண்ணெய் - 1 Tbsp
  உளுத்தம்பருப்பு - 1 Tsp
  கடலை பருப்பு - 1 Tsp
  கடுகு - 1/2 Tsp
  இஞ்சி - 1 துண்டு
  பச்சை மிளகாய் - 2
  கருவேப்பிலை - சிறிதளவு
  கேரட் - 1 கப் ( துருவியதி )
  வெங்காயம் - 1
  கெட்டி தயிர் - 1/2 கப்
  தண்ணீர் - 3/4
  உப்பு - தே.அ
  பேக்கிங் சோடா - 1 சிட்டிகை  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

  பின் பச்சை மிளகாய் , கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக துருவிய கேரட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

  இறுதியாக ரவை சேர்த்து பிரட்டி வறுத்துக்கொள்ளுங்கள்.

  பின் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவிடுங்கள்

  ஆறியதும் கால் கப் தண்ணீர் மற்றும் கெட்டித் தயிர் ஊற்றி கெட்டி பதத்திற்கு கலந்துகொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.பின் அதை தட்டுபோட்டு மூடி 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.

  குளிர்காலத்திற்கு ஏற்ப சிக்கனை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்கள்! சுவை வேறமாதிரி இருக்கும்

  10 நிமிடங்கள் கழித்து அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்துவிட்டு பின் இட்லி தட்டில் ஒரு கரண்டி எடுத்து இட்லி போல் தட்டில் பரப்புங்கள்.

  இப்படி ஒவ்வொன்றாக செய்து இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேக வையுங்கள். வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி இட்லியை எடுத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் அருமையான ரவா இட்லி தயார்.

  இதற்கு சாம்பார் கெட்டிச்சட்னி பொருத்தமாக இருக்கும்.

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: